அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில். அடியார்கள் வாழ்வில் இன்றும் பல அற்புதங்களை செய்து வருகிறார் இங்கு கடற்கரையோரம் கோவில் கொண்டிருக்கும் செந்தூர் வேலவன்.
இங்கு பன்னீர் இலை விபூதி பிரசித்தம். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பிரசாதம் புகழ்பெற்றது போல இங்கு இந்த பன்னீர் இலை விபூதி பிரசித்தம்.
காலையில் ஸ்வாமிக்கு நடக்கும் விபூதி அபிசேகத்தில் இருந்து எடுத்து கொஞ்சம் இரவு நடக்கும் சந்தன அபிசேகத்தில் இருந்து கொஞ்சம் சந்தனம் எடுத்தும் பன்னீர் இலையில் வைத்து இந்த விபூதி தரப்படுகிறது.
முருகனை வணங்கி இந்த பன்னீர் இலை விபூதியை பூசிக்கொண்டால், கொஞ்சம் சாப்பிட்டாலோ நம் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
மகான் ஆதிசங்கரர் தன் நோய்கள் தீர இந்த சுப்பிரமணியரை வேண்டி இங்குள்ள பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை சாப்பிட்டு நிவாரணம் பெற்று, முருகனை போற்றி சுப்ரமணிய புஜங்கம் பாடினாராம்.
இவ்விபூதியை உட்கொண்டால் அனைத்து நோய்களும் குணமாகும் என ஆதிசங்கரரால் சுப்ரமணிய புஜங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று அதை பொக்கிஷமாக பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி நெற்றியில் தினமும் இட்டு வந்தால் சுகமான வாழ்வு ஜெயமாகும் என்பது நம்பிக்கை.