பிரதமர் இரண்டு நாட்கள் முன் கான்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது படியில் தடுமாறி விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊடகங்கள் இதை பெரிதாக்கின. பிரதமர் மோடி மீது கொள்கை ரீதியாக வேறுபட்டிருக்கும் சிலர் இதை மீம்ஸ் போட்டு கேலி கிண்டல்கள் கூட செய்தனர்.
இது சாதாரணமாக எல்லோருக்கும் நிகழும் நிகழ்வுதான். என்னதான் கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும், கொள்கை தவறாக இருந்தால் கண்டிக்கலாம் எதிர்க்கருத்து தெரிவிக்கலாம்.
ஆனால் ஒரு பிரதமர் கீழே விழும்போது அதை பார்த்து சிரிப்பது, மீம்ஸ் கிரியேட் செய்வது இவை எல்லாம் மிக தவறான அணுகுமுறை. சமூக வலைதளங்கள் எதை நோக்கி செல்கின்றன என புரியவில்லை.
இந்நிலையில் பிரதமர் கீழே விழுந்தது குறித்து அதை அபசகுனமாகவும் சிலர் பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது. பிரதமரின் ராசி விருச்சிக ராசி. விருச்சிகராசிப்படி நேற்று முன் தினம் அவருக்கு சந்திராஷ்டமம். மாதா மாதம் எல்லா ராசிக்கும் சந்திராஷ்டம தினம் உண்டு. அந்த நாளில் எப்படிப்பட்ட ஜாம்பவானுக்கும் அடி சறுக்கும் மனதில் எண்ணங்களில் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
உதாரணமாக நீங்கள் செல்ல வேண்டிய பஸ்ஸில் ஏறாமல் தேவையில்லாமல் வேறு பஸ்ஸில் ஏறவைத்து பாதி வழியில் இறங்கும் குழப்பம் எல்லாம் சந்திராஷ்டம நாளில் நடக்கும்.
வீட்டில், நண்பர்களிடத்தில் யதார்த்தமாக காமெடிக்காக பேசப்படும் வார்த்தை கூட அவர்களுக்கு பிடிக்காமல் எரிச்சலை மூட்டும். உங்கள் மீது கோபத்தை வரவைக்கும் பதிலுக்கு நீங்களும் டென்ஷன் ஆவீர்கள்.
சந்திராஷ்டமம் பற்றி உணர்ந்தோருக்கு இது நன்கு தெரியும் பலருக்கு இது பற்றி அறவே தெரியாது. ஆனால் அவர்களுக்கும் இது போல திடீர் குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் ஏற்படும் .இதனால்தான் இது ஏற்படுகிறது என தெரியாது.
அதுபோலவே கடும் குழப்பத்தையும் பதட்டத்தையும் இது போல தடுமாறி விழுவது, தடுக்கி விழுவது போன்ற சாதாரண சந்திராஷ்டம தினமே நேற்று முன் தினம் பிரதமரின் விருச்சிக ராசிக்கு நடந்தது. இது எல்லோருக்கும் பொதுவாக நடப்பதுதான். இதில் கவலைப்படவும் விமர்சனம் செய்யவும் தேவையில்லை.