மனிதனாய் பிறந்தவருக்கு அவரவருக்கு தகுந்த மாதிரி பிரச்சனைகள் வந்துக்கொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கடன் பட்டார் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் பாடி வைத்துள்ளார். அதன்படி கடன் தொல்லை ஒரு மனிதனின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும் பிரச்சனை. அவனது தன்மானம், அவமானம் சார்ந்தது, சிலர் என்னதான் முயன்றாலும் கடனை அடைக்க முடியாமல் திணறுவார்கள். அவர்களுக்கான எளிய பரிகாரம்தான் இது.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்பு வசதிகள் உருவாகும் . அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பித் தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
மைத்ர முகூர்த்தம் வரும் சனிக்கிழமை (11.4.2020 )இரவு 8.12 மணி முதல் 10.12 மணி வரை வருகிறது. அந்த நேரத்தில் கடனில் சிறு பகுதியை கொடுங்கள் சீக்கிரம் உங்கள் அடையும்.
நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!