தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து…


00436bd63f6b4cd72df908658eb5f536

பாடல்..

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

விளக்கம்..

திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன