விகாரி வருடம்- மோசமான தாக்கங்களை ஏற்படுத்துமா

By Staff

Published:

வரும் ஏப்ரல் 14ல் சித்திரை புத்தாண்டு பிறக்க இருக்கிறது. விளம்பி வருடம் முடிந்து புதிய வருடம் விகாரி பிறக்க இருக்கிறது.

0a17f24ac712790e5df16a274a66ee84

இந்த விகாரி வருடம் அதாவது விகாரம் என்ற வார்த்தை பொருள் படுவதால் விகாரி வருடம் மிக விகாரமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களான பேஸ்புக் வாட்ஸப் போன்ற தளங்களில் தகவல்கள் பரப்பபடுகிறது.

இதற்கு முன் 1959-1960-1899-1900-1839-1840-1779-1780-1719-1720 முதலிய வருடங்களில் விகாரி வருடங்கள் வந்திருக்கின்றன.

தகுந்த பண்டிதர்களை கலந்தாலோசிக்கும்போது தாது வருட பஞ்சத்தையே பெரிதாக குறிப்பிடுகின்றனர். 1877ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட தாது வருஷ பஞ்சம் உலகத்தையே உலுக்கியது.

சோமாலியா அளவுக்கு பலர் எலும்பும் தோளுமாக காட்சியளித்தது புகைப்படமாக இன்றளவும் உள்ளது.

விகாரி என்றால் உடனே விகாரம் என்ற பொருள் கொள்ள கூடாது என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும் பொதுவான பலன்களாக

உமாபதி அருளால் உலகம் செழிப்பைச் சந்திக்கும் வருடமாகத் திகழப்போகிறது விகாரி. நவநாயகர்களில் இந்த வருடத்தின் ராஜாவாக சனிபகவான் திகழ்கிறார். இவருடைய அருளாலும் இவர் தரப்போகும் பலன்களாலும் மழைப்பொழிவுக்குக் குறைவு இருக்காது. அதேநேரம், உணர்வுபூர்வமான நிகழ்வுகளால் தேசத்தில் பிரச்னைகள் எழலாம்.

இந்த வருடத்தின் அர்க்காதிபதியாகவும் சனிபகவான் வருகிறார். குருபகவானுடன் இவரின் சேர்க்கையால், பொன் – பொருள் ஆபரணங்கள் தொடர்பான வணிகங்களில் லாபநிலை ஏற்ற இறக்கமாகவே அமையும்.

என்று பயப்பட வேண்டிய வருடம் இல்லை என்றும் உரைக்கின்றனர்.

Leave a Comment