நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை ”திருத்தொண்டர் புராணம்” என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் ”நால்வர்” என்றழைக்கப்படும் “அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்” உருவச்சிலைகளாவது கண்டிப்பாய் இருக்கும். இந்த நால்வரும் “சைவ சமய் குரவர்” என்று அழைக்கப்படுகின்றனர்.
12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசராலும், ஏழாம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடலாகும்.
நாயன்மார்களில் சிலரே சமயநூல்களில் புலமை பெற்றவர்கள். மற்றவர்களெல்லாம் மிகச்சிறந்த பக்தர்கள் மட்டுமே! பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் மூலம் நமக்கு இறவன் உணர்த்துகின்ற பாடம்.
நாயன்மார்கள் வரிசையில் பெண்கள்:
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கி.பி 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரே பெண் நாயன்மார்களில் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் அம்மையாரின் இயற்பெயர் “புனிதவதி” ஆகும். இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பெண்நாயன்மார் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் “நின்றசீர் நெடுமாற நாயனார்” என்ற நாயன்மாரின் மனைவியான “மங்கையர்கரசி”யாவார். மூன்றாவது பெண் நாயன்மாராக இடம்பெற்றவர், திருநாவலூரை சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி “இசைஞானி”. இவர்களின் மகன்தான் சுந்தரர். சைவ சமய குரவர்களில் ஒருவர்.
நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார்கள் மொத்தம் அறுபது. அறுபத்தி மூவர் அல்ல. சுவாமிமலைக்கு படி 60. தமிழ் ஆண்டுகள் 60, மனிதனுக்கு மணிவிழா செய்வது 60 வது ஆண்டு. ஒரு நாழிகைக்கு அறுவது வினாடி.ஒரு வினாடிக்கு அறுவது நொடி. இப்படி எல்லாமே ஆருபது என்ற கணக்கிலேதான் வரும். அறுபத்தி மூன்று என வராது. சிவபெருமான் அடி எடுத்து கொடுத்து சுந்தரமூர்த்தி நாயன்மார் பாடிய நாயன்மார்கள் மொத்தம் அறுபது பேர்கள்தான். சுந்தரமூர்த்தி நாயன்மாரின் மறைவுக்கு பின் 100 ஆண்டுகள் கழித்து ”நம்பியாண்டார் நம்பி அடிகள்” சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அறுபது நாயன்மார்களை சற்று விரிவாய் பாடுகின்றார். அப்போது, நாயன்மாரை பற்றி பாடிய சுந்தரரையும், அவரப்பெற்ற சடையனாரையும், அவரின் அம்மா இசைஞானியாரையும் சேர்த்து அறுபத்தி மூவராக்கினார்.
நாயன்மார்கள் பிறந்த தலங்களை ”நாயன்மார் அவதார தலங்கள்” என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு தலங்கள் தமிழகத்தில் உள்ளது. மற்றவை பாண்டிச்சேரி(காரைக்கால்),ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற விகிதத்திலும், கேரள மாநிலத்தில் தலங்களும் உள்ளது.
நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொருவரும்…, சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்தியொருவரும், அடியாரை வழிப்பட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்தியொருவரும் ஆவர்.
நாயன்மார்களின் குலங்களும், அவர்களின் குரு பூஜை தினங்களும்…
1 | அதிபத்தர் | பரதவர் | ||
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | ||
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | ஆனி பூரம் | |
4 | அரிவட்டாயர் | வேளாளர் | ||
5 | ஆனாய நாயனார் | இடையர் | ||
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | சித்திரை | |
7 | இடங்கழி நாயனார் | செங்குந்தர் குல குறுநில மன்னர்[3][4] | ||
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | ||
9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | ||
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | ||
11 | எறிபத்த நாயனார் | செங்குந்தர் [5][6] | ||
12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | ஆனி ரேவதி | |
13 | ஏனாதி நாதர் | சான்றார் | ||
14 | ஐயடிகள் காடவர்கோன் | குறுநில மன்னர் | ||
15 | கணநாதர் | அந்தணர் | ||
16 | கணம்புல்லர் | செங்குந்தர் [7][8]் | ||
17 | கண்ணப்பர் | வேடர் | ||
18 | கலிய நாயனார் | செக்கார் | ||
19 | கழறிற்ற்றிவார் | அரசர் | ||
20 | கழற்சிங்கர் | குறுநில மன்னர் | வைகாசி பரணி | |
21 | காரி நாயனார் | செங்குந்தர் [9][10] | ||
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | ||
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | ||
24 | குலச்சிறையார் | மரபறியார் | ||
25 | கூற்றுவர் | செங்குந்தர் குல குறுநில மன்னர் [11][12] | ||
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | ||
27 | கோச் செங்கட் சோழன் | அரசன் | ||
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | ||
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | ||
30 | சண்டேஸ்வர நாயனார் | அந்தணர் | ||
31 | சத்தி நாயனார் | வேளாளர் | ||
32 | சாக்கியர் | வேளாளர் | ||
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | ||
34 | சிறுதொண்டர் | சாலியர் | சித்திரை பரணி | |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | ஆடிச் சுவாதி | |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | 8 | 8 |
37 | சோமசிமாறர் | அந்தணர் | வைகாசி ஆயிலியம் | |
38 | தண்டியடிகள் | செங்குந்தர் [13][14] | ||
39 | திருக்குறிப்புத் தொண்டர் | ஏகாலியர் | சித்திரை சுவாதி | |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | வைகாசி மூலம் | |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | சித்திரை சதயம் | |
42 | திருநாளை போவார் | புலையர் | ||
43 | திருநீலகண்டர் | குயவர் | ||
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | வைகாசி மூலம் | |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் | |
46 | திருமூலர் | இடையர் | ||
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | வைகாசி பூசம் | |
48 | நரசிங்க முனையர் | செங்குந்தர் குல குறுநில மன்னர் [15][16] | ||
49 | நின்றசீர் நெடுமாறன் | அரசர் | ||
50 | நேச நாயனார் | சாலியர் | ||
51 | புகழ்சோழன் | அரசர் | ||
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | ஆனி ஆயிலியம் | |
53 | பூசலார் | அந்தணர் | ||
54 | பெருமிழலைக் குறும்பர் | செங்குந்தர்[17][18] | ||
55 | மங்கையர்க்கரசியார் | அரசர் | சித்திரை ரோகிணி | |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | ||
57 | முருக நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் | |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | ||
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | ||
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | ||
61 | மெய்ப்பொருள் நாயனார் | செங்குந்தர் குல குறுநில மன்னர்[19][20] | ||
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | ||
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் |
இவை நாயன்மார்களின் பற்றிய பொதுவான தகவலாகும். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு நாயன்மார்களைப் பற்றி அகர வரிசையில் இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி