இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!

By Staff

Published:


0225f6de5e6199cf7f59fdc4ee296784

தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள்வரை அனைத்து பருவநிலைகளையும் உள்ளடக்கியது .மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்சபூத சக்திகள் குவிக்கப்படுகிறது.

dfe7e746545c3f30c87b87489be8b5d0

தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது . தேங்காயில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது . தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும் . கோவில் விக்கிரகத்தின்முன் தேங்காய் உடைக்கும்போது அந்த பஞ்சபூத சக்திகள் வெளிப்பட்டு இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது . ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெல்லாம் பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். முச்சந்தியில் சிதறுகாய் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப்படுகிறது .

Leave a Comment