உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் என்பது மட்டுமே பலருக்கு தெரிந்திருக்கும். ரஜினிகாந்த் நடித்த தளபதி உள்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பார் என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு வழக்கறிஞர், பெரியாரின் சீடன், அவர் சில படங்களை இயக்கியுள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை.
சாருஹாசனுக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தாலும் அவர் முறையாக கல்வி கற்றார். அவர் வழக்கறிஞராகி பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி பல வழக்குகளில் வெற்றியும் பெற்றுள்ளார். வழக்கறிஞர் தொழிலில் முழு ஈடுபாட்டுடன் இருந்த நிலையில்தான் அவருக்கு நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த படம் பெற்ற வரவேற்பு காரணமாக அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்தார். சுகாசினி அறிமுகமான நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட தமிழில் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிக்கு வில்லனாக மாறுவாரா கமல்.. லோகேஷின் தரமான சம்பவம்!
ரஜினியுடன் தளபதி படத்தில் நடிக்கும் போது தான் ரஜினிக்கும் அவருக்கும் நெருக்கமான அன்பு கிடைத்தது. இதன் பிறகு ரஜினிகாந்த் ஒவ்வொரு பொங்கல் தினத்திலும் சாருஹாசனுக்கு வேஷ்டி பரிசாக அனுப்புவார் என்றும் கூறப்படுவது உண்டு.
இயக்குனர் இமயம் பாரதிராஜா சாருஹாசனுக்கு வேதம் புதிது திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தை கொடுத்திருப்பார். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதேபோல் தளபதி திரைப்படத்திலும் நாயகி சோபனாவின் அப்பாவாக நடித்து அசத்திருப்பார். ரஜினிக்கு பெண் கேட்டு மம்முட்டி வந்து அவரை மிரட்டியபோதும் அவர் கொஞ்சம் கூட பயப்படாமல் நடித்த நடிப்பு இன்றும் அனைவரது கண்ணுக்குள் இருக்கும்.
நடிகர் சாருஹாசன் கன்னடத்தில் தபரானா காதே என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி என மூவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்ற பெருமை அவர்களது குடும்பத்திற்கு கிடைத்தது.
தமிழ் மட்டும் இன்றி கன்னடம் மலையாளம் தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்தார். மேலும் புதிய சங்கமம், ஐபிசி 215 ஆகிய இரண்டு படங்களை இவர் இயக்கியுள்ளார். சாருஹாசனுக்கு தற்போது 92 வயது ஆகிய நிலையில் தற்போதும் கூட அவர் சில படங்களில் நடித்து வருகிறார்.
ரஜினி படத்தை பாதியில் விட்டு சென்ற தயாரிப்பாளர்.. பணம் கொடுத்து உதவிய கமல்..!!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ’தாதா 87’ என்ற படத்தில் நடித்த அவர் தற்போது ஹரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 92 வயதிலும் ஒரு நடிகர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது மிகப்பெரிய சாதனை. நடிகர் சாருஹாசன், கோமளம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் சுகாசினி.
நடிகர், இயக்குனர், வழக்கறிஞர் ஆகியவை மட்டுமின்றி இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது இவர் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் என்பதாகும். பெரியாரின் சிஷ்யன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு. பெரியாரின் கொள்கைகளை இவர் ஏற்றுக் கொண்ட காரணத்தினால் கமல்ஹாசனும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பகுத்தறிவுவாதியாக மாறினார்.
ஒரே கதையில் 2 படம்… பாக்யராஜுக்கு அந்த 7 நாட்கள்… கமல்ஹாசனுக்கு ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது..!!
92 வயதிலும் நடித்து வரும் சாருஹாசன் 100 வயதுக்கும் மேல் திரையுலகில் நடித்து இன்னும் அதிக புகழ் பெற வேண்டும் என்பதே அனைவரும் ஆசை.