அப்பாவுக்கு அறுவை சிகிச்சை என அறிந்ததும் ஓடிச்சென்று பார்த்த விஜய்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

By Sarath

Published:

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். நடிகர் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கு 78 வயதாகிறது.

இந்த வயதிலும் தொடர்ந்து படங்களை இயக்குவது சின்னத்திரை தொடர்களில் நடிப்பது என ஆக்டிவாக இருந்து வருகிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். சமீபத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடித்த நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி இருந்தார்.

தந்தையுடன் மோதல்

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பெரிய பேசு பொருளாக இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட பெற்றோர்களை அழைத்த நடிகர் விஜய் அவர்களை பார்மாலிட்டி காக அங்கிருந்து சென்றுவிட்டார் போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட ஆடியோ ஒன்று ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில், அனைவருக்கும் வணக்கம். நான் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகிறேன். நம்ம வாழ்க்கையில் அப்பப்போ சில இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் மறக்க முடியாத சம்பவங்கள் எல்லாம் நடக்கும். அதுபோல சமீப காலமாக எனக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை

நான் எப்போதும் ரொம்ப ஆக்டிவான எனர்ஜியான பர்சன் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் கடந்த இரண்டு மூணு மாதங்களாகவே எனக்கு ஒரு மாதிரி ஆகவே ரொம்ப எனர்ஜி குறைவா இருந்த மாதிரியே எனக்கு ஒரு பீலிங் இருந்துச்சு. அதனால நான் டாக்டர்கிட்ட போய் பார்த்தேன். அவர் ஸ்கேன் எடுக்கணும்னு சொன்னார். உடனே நாங்களும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம்.

அப்போ டாக்டர்கள் ஒரு பிரச்சனை இருக்கிறதை கண்டுபிடிச்சு சொன்னாங்க. அதுவும் உடனே சர்ஜரி பண்ணனும் அப்புறமா ரெண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொன்னாங்க அதுபோல நானும் பண்ணினேன். நேற்றைக்கு சர்ஜரி முடிஞ்சு. இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகிட்டேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்சனை வந்தால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருக்க வேண்டும்.

அய்யய்யோ எனக்கு பிரச்சனை வந்துவிட்டதே என்று நாம நினைத்துக் கொண்டிருந்தால் டிப்ரஷனுக்குள் ஆளாகி விடுவோம். எனக்கு சர்ஜரி பண்ணனும் என்று சொன்னதும் நான் நமக்கு ஏதோ நடக்கிறது என்று தெரிஞ்சுவிட்டது. நான் அதை ஏற்றுக் கொண்டேன். அதுபோல டாக்டர்ஸ் ஸ்கேன் எடுக்கணும் என்று சொன்னார்கள். நான் எடுத்துக் கொடுத்ததும் என்ன பிரச்சனை என்பதே உடனே கண்டுபிடித்துவிட்டார். அது ரொம்ப நல்ல விஷயம். சில டாக்டர்கள் அந்த மாதிரி சீக்கிரமா பிரச்சனையை கண்டுபிடிக்காமல் விட்டு விடுகிறார்கள்.

ஆனால் எனக்கு கிடைத்த டாக்டர் உடனே பிரச்சனையை கண்டுபிடித்து சர்ஜரி செய்து விட்டார். இது நல்ல விஷயம் தான் என்று நம்முடைய மனதை நாம் எல்லா விஷயங்களை நல்லது என்று ஏற்றுக் கொண்டால் நம்முடைய மனது பாசிட்டிவாக இருக்கும் என பேசியிருந்தார்.

ஓடிச்சென்று பார்த்த விஜய்

அந்த ஆடியோ தீயாக பரவிய நிலையில், தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்த நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பியது விலையாக அப்பா மற்றும் அம்மாவை சந்தித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

குடும்பத்தில் அப்பா மகன் சண்டை எல்லாம் வருவது இயல்புதான் ஆனால் யாருக்காவது ஏதாவது ஒன்று நடந்து விட்டால் உடனடியாக பார்ப்பதுதான் மனித இயல்பு என்பதை நடிகர் விஜய்யும் நிரூபித்து இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.