குஷ்பூவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது எதற்காகன்னு தெரியுமா? அட இதுதான் காரணமா…?!

By Sankar Velu

Published:

90களில் தமிழ்த்திரை உலகைக் கலக்கிய நடிகை யார் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் குஷ்பு. இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்.

TT
TT

தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான இவர் படிப்படியாக நடிப்பில் தெளிவும், தேர்ச்சியும் அடைந்து நாட்டாமை படத்தில் எல்லாம் நடிப்பில் முதிர்ச்சி அடைந்தார். தாய்க்குலங்களை அதிகம் கவர்ந்த நடிகை இவர் தான். சின்னத்தம்பி படம் ஒன்றே போதும்.

Kilakku vaasal
Kilakku vaasal

அந்தக் கால கட்டத்தில் இந்தப் படம் பார்க்க தாய்மார்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குப் படையெடுத்தனர். பிரபுவுக்கும், குஷ்புவுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. நல்லா ஒர்க் அவுட் ஆனது. படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. நவரச நாயகன் கார்த்திக் உடன் இவர் நடித்த கிழக்கு வாசல் படம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது.

1970 மற்றும் 80களில் அம்பிகா, ராதா, பானுப்ரியா, இளவரசி, ஸ்ரீப்ரியா முன்னணி நடிகைகளாக தமிழ்த்திரை உலகில் வலம் வந்தனர். ஆனால் அவர்கள் அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் புடவை அல்லது சுடிதார் உடையில் தான் வந்தனர். அவர்களது நடனம் எல்லோரும் பார்த்து ரசிக்கும்படியாகவே இருந்தன. எந்தவிதமான ஆபாசமும் இருக்காது.

SV
SV

அதன் பிறகு வந்த டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா கவர்ச்சியில் இறங்கி விட்டனர். சினிமாவில் காபரே டான்ஸ் ஆடி ரசிகர்களின் தூக்கத்தைத் தொலைத்தனர். இவர்கள் பேன்ட், சூட்கள், டி ஷர்ட், ஜீன்ஸ், மினிஸ், மிடிஸ் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து இருந்தனர். அவர்களை ரசிகர்கள் கவர்ச்சி கன்னிகளாகவே பார்த்தனர்.

அதன் பிறகு வந்தவர் தான் குஷ்பூ. இவர் கதாநாயகியாக அறிமுகமானது முதல் மேற்கத்திய உடை அணிந்தே நடித்தார். தனது தனித்திறன் கொண்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை அசரடித்தார். நடனத்திலும் இவர் வெஸ்டர்ன் டான்ஸ் தான். ரசிகர்கள் இதைப் பார்த்ததும் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

Kushboo 4
Kushboo 4

சின்னத்தம்பி படத்திற்குப் பிறகு தான் அவர் கிராமத்துப் பெண் வேடத்தில் பாரம்பரிய உடையான சேலை கட்டி நடித்தார். அதே நேரம் சிங்கார வேலன் படத்தில் குட்டைப் பாவாடையுடன் வந்து அசத்தினார். மன்னன், நாட்டாமை போன்ற படங்களில் தமிழ் பொண்ணுக்கே உரிய லட்சணத்துடன் தோற்றமளித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இவரது தோற்றமும், ஆடையும் ரசிகர்களைக் கிறங்கடித்தன.

இவர் ஒரு இந்திப் பெண் என்றாலும் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தால் தமிழகத்தில் குடியேறி அதைக் கற்றுக் கொண்டார். சில படங்களுக்காக ரதி, அமலா போன்ற நடிகைகள் சென்றதைப் போல மும்பைக்குச் சென்றார்.

Kushboo 1
Kushboo 1

குஷ்பூவின் பிரிவைத் தாங்காத ரசிகர்கள் அவளுக்குக் கோவில் கட்டினர். அவரது பெயரில் இட்லியை விற்க ஆரம்பித்தனர். நான்கு நடிகைகளுக்கு மட்டுமே இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் பெங்காலி படங்களில் நடித்த சுசித்ரா சென். தெலுங்குப் பட உலகில் கலக்கிய சாவித்திரி. இந்திப் படங்களில் அசத்திய மாதுரி தீட்சித். அடுத்து நம் தமிழ்ப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த குஷ்பு.