இன்னைக்கு வேணும்னா அட்லியை பேசலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி தமிழ் டூ இந்தி.. லிஸ்ட் வேற லெவல்

ஷாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் ஒரே நாளில் 129 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் நம்மூர் மக்கள் ஜவான் திரைப்படம் 23…

Tamil stars who made their mark in Bollywood before director Atlee

ஷாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் ஒரே நாளில் 129 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் நம்மூர் மக்கள் ஜவான் திரைப்படம் 23 படங்களின் காப்பி என்று கூறி விமர்சித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் சக்கை போடுபோடுவதாக கூறுகிறார்கள்.

இதனால் அட்லி வடமாநிலத்தில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது மாறி உள்ளார். அட்லி மட்டுமல்ல ஏற்கனவே பல இயக்குனர்கள், நடிகைகள் பாலிட்டில் தடம் பதித்துள்ளனர். அதில் மிகப்பெரிய முத்திரையும் பதித்துள்ளனர். அவர்களின் லிஸ்டை இப்போது பார்ப்போம்.

அட்லிக்கு முன்பாக பாலச்சந்தர், மணிரத்னம், ப்ரியதர்ஷன், முருகதாஸ், பிரபுதேவா, பாக்யராஜ் போன்ற இயக்குனர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கு அடுத்து பிரம்மாண்டமான ஒரு கமர்சியல் வெற்றியை அட்லி கொடுத்திருக்கிறார். முருகதாஸ் இயக்கிய கஜினி இந்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மணிரத்னம் இயக்கிய ரோஜா, பாம்பாய், குரு ஆகியவை பாலிவுட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

நடிகைகளை பொறுத்தவரை, வைஜயந்தி மாலா, ஹேமமாலினி, மீனாட்சி சேஷாத்திரி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா,. வித்யா பாலன் என தமிழ்நாட்டில் இருந்து சென்று வெற்றி கொடி நாட்டி உள்ளனர். ஸ்ரீதேவி பாலிவுட்டில் பெற்ற புகழ் வேறு எந்த நடிகைக்கும் இதுவரை கிடைக்கவில்லை.

நடிகர்களை பொறுத்தவரை கமல்ஹாசன் மட்டுமே பல வெற்றிப்படங்களை கொடுத்து மிகப்பெரிய வெற்றி நாயகனாக இந்தியில் இருந்தார்.

ஷாருக்கானை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்க்கும் அட்லி!

ஏக் துஜே கே லியே, சனம் தேரி கசம், ராஜ் திலக், நகர், ஜெராப்தார், ஹிந்துஸ்தானி மற்றும் சாச்சி 420 ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

ரஜினியை பொறுத்தவரை சிறுசிறு வேடங்களில் மட்டுமே நடித்துள்ளார். பாலிவுட்டில் ரஜினி நடித்த பெரும்பாலான படங்கள் சிறிய கேரக்டர்கள் ஆகவே இருக்கும்.