ரஜினி படத்தில் நடித்த ஸ்டண்ட் வீரருக்கு ஏற்பட்ட இழப்பு.. வருத்தம் தெரிவித்த இயக்குனர்…!!

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்டண்ட் கலைஞர் ஒருவருக்கு மூன்று விரல்கள் காணாமல் போனதால் படக்குழு பரபரப்பானது. அது  ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவான மனிதன் என்ற படத்தில் தான்.

இந்த படத்தில் கார்கள் பறந்து செல்வது போன்ற ஒரு காட்சியை படமாக்கப்பட்டது. அப்போது பழைய கார்களும் புது கார்களையும் ஏவிஎம் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார். அந்த காட்சிகளை வைத்து திறமையான ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து எஸ்பி முத்துராமன் படமாக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கார் பறக்க வேண்டும் என்ற காட்சி படமாக்கப்பட்டது. இரண்டு மூன்று முறை ரிகர்சல் பார்த்து ஸ்டண்ட் கலைஞரை அதில் உட்கார செய்து  காரை பறக்க வைத்தார். கார் கீழே விழுந்ததும் அதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர் வெளியே வரவே இல்லை.

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

manithan 1

உடனே அதிர்ச்சி அடைந்த படக்குழு கார் அருகே போய் பார்த்தபோது காரில் ஸ்டண்ட் கலைஞர் சிக்கி இருந்தார். அவரை வெளியே எடுத்து பார்த்த போது அவரது மூன்று விரல்கள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு விரல்களை தேட ஆரம்பித்தனர். இரண்டு துண்டான விரல்கள் மட்டும் தான் கிடைத்தது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடைந்த விரல்களை ஒட்ட வைக்கும் சிகிச்சை செய்வது குறித்து கேள்விப்பட்ட எஸ்பி முத்துராமன் உடனடியாக அந்த இரண்டு விரல்களையும் எடுத்துக்கொண்டு அந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே உள்ள மருத்துவர்கள் அந்த ஸ்டண்ட் கலைஞருக்கு இரண்டு விரல்களை ஒட்டவைத்தனர். இருப்பினும் மூன்றாவது விரல் கடைசி வரை கண்டுபிடிக்க முடியாததால் அவருக்கு அந்த விரலை ஒட்ட வைக்க முடியவில்லை.

எஸ்.பி முத்துராமனை அந்த ஸ்டண்ட் கலைஞர் எப்போது பார்த்து வணக்கம் வைத்தாலும் என் படத்தில் நடித்ததால் தானே உனக்கு இந்த விரல்கள் போனது என்று வருத்தமாக கூறுவாராம். ஆனால் அதைபற்றியெல்லாம் கவலைப்படாத அந்த ஸ்டண்ட் கலைஞர், அதெல்லாம் பரவாயில்லை விடுங்க சார் என்று ஜாலியாக கூறுவாராம். இந்த சம்பவத்தை இயக்குனர் எஸ்பி முத்துராமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்க மறுத்த கதை….. திருப்புமுனையாக அமைந்த சூப்பர் ஹிட்படம்… எந்த படம் தெரியுமா….?

manithan2

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மனிதன் படத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ரகுவரன், ஸ்ரீவித்யா, ஜெய் கணேஷ், வினுசக்கரவர்த்தி, சோ, டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். பொதுவாக ஏவிஎம் படம் என்றால் அதில் இளையராஜா தான் இசையமைப்பாளர். ஆனால் இந்த படத்தில் சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற காளை காளை   முரட்டுக்காளை என்ற பாடல் வேண்டாம் என்று ரஜினி கூறினாராம்.

என்னைப் பற்றி நானே பெருமையாக பேசுவது போல் இருக்கும் . அதனால் இந்த பாடல் வேண்டாம் என்று கூறியிருந்தார்.  எஸ்பி முத்துராமன் அவரை சமாதானப்படுத்தி இந்த பாடலை வைரமுத்து மிகவும் அழகாக எழுதியுள்ளார், படத்தின் கதைக்கு இந்த பாடல் தேவையானதாக உள்ளது என்று சமாதானப்படுத்தினார். பின்னர் இந்த பாடல் திரையரங்கில் தோன்றும் போது ரசிகர்கள் கொண்டாடினார்.

நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி, கமல் படங்கள்! வெற்றி யாரு பக்கம்!

அதேபோல் மனிதன் மனிதன் என்ற பாடலை எங்கே வைப்பது என்று புரியாத நிலையில் அந்த பாடலை டைட்டில் பாடலாக வைத்தார்கள். இந்த படம் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசானது. இதே நாளில் தான் கமல்ஹாசன் நடித்த நாயகன் படமும் ரிலீஸ் ஆனது. நாயகன் மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனம் பெற்றாலும் வசூல் அளவில் மனிதன் தான் அதிக வசூலை பெற்றது.