தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த நடிகை ஒருவர் கூடிய விரைவில் 9 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக மாற இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரே ஒரு தெலுங்கு படம் மற்றும் 5 இந்தி படங்கள் நடித்துள்ளார். இதுபோக இரண்டு இந்தி திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் தான் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி.
விரைவில் நடிகை ரியா சக்கரவர்த்தி திருமணம் செய்ய போவதாகவும் அவர் திருமணம் செய்ய போகும் நபர் தொழிலதிபர் என்றும் அவருக்குதான் ரூபாய் 9000 கோடி சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ஒன்றில் தான் நடிகை ரியா சக்கரவர்த்தி நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார், இரண்டு ஹிந்தி படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவரை ரியா சக்கரவர்த்தி காதலித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவரது தற்கொலைக்கு இவரும் காரணம் என்று சுஷாந்த் குடும்பத்தினரால் குற்றம் சுமத்தப்பட்டார்.
அது மட்டும் இன்றி போதைப்பொருள் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரியா கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் என்பதும் ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் இடையே காதல் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொழிலதிபர் இந்திய அளவில் பிரபலமான ஸ்டாக் மார்க்கெட் புரோக்கிங் கம்பெனி வைத்துள்ளதாகவும், இவரது சொத்து மதிப்பு சுமார் 9 ஆயிரம் கோடி என்றும், இவரது பெயர் போர்ப்ஸ் கோடீஸ்வரர் பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடித்தது 30 படம்… ஆனால் சொத்து மட்டும் 3300 கோடியா? நடிகர் அரவிந்த்சாமியின் மறுப்பக்கம்!
ரியா மற்றும் தொழிலதிபர் ஆகிய இருவரும் தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரியா சக்கரவர்த்தி இந்த தொழிலதிபரை திருமணம் செய்தால் அவருடைய 9000 கோடிக்கு சொந்தக்காரராகி விடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த டேட்டிங் காதலாக மாறி, திருமணம் ஆக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.