தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபர் என்றால் அது டி. ராஜேந்திரன் தான். சினிமாவில் அதிகம் கவனிக்கப்படக்கூடிய நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என உச்சம் தொட்டவர்களை அச்சம் கொள்ள வைத்தவர் டி. ராஜேந்திரன்.
80 களில் ரஜினி மற்றும் கமல் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தார்கள். இந்த நேரத்தில் 1980 மே மாதம் வெளியான ஒரு தலை ராகம் படத்தை யாராலும் மறக்க முடியாது. படம் ரிலீசான அன்று முதல் காட்சிக்கு கூட்டமே இல்லை, இரண்டாவது சோவில் ஓரளவு கூட்டம் மாலை 6 மணி காட்சிக்கு ஏதோ கொஞ்சம் கூட்டம், இன்னும் மூன்று நாளோ நான்கு நாளோ படம் ஓடினாள் பெரிய விஷயம் என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறிவந்தனர்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் வேகமெடுக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோத துவங்கியது. அதை அடுத்து பல திரையரங்குகளில் இந்த படம் 365 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
மேலும் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை இல்லாமே டி ராஜேந்திரன் தான். ஆனால் தயாரிப்பு, இயக்கம் இ. எம் இப்ராஹிம் என்று டைட்டில் வந்தாலும் டி ராஜேந்திரன் அடுத்தடுத்த படங்களை பார்க்கும்போது அது முதல் படம் என்பதால் தயாரிப்பாளருக்கும் அவருக்கு இடையான ஒப்பந்தத்தால் மட்டுமே போடப்பட்ட டைட்டில் என்பது புரியும்.
ஒரு தலை ராகம் கிட்டத்தட்ட மிகப்பெரிய புரட்சி படம். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாருமே புதியவர்கள். முக்கியமாக கல்லூரி காலத்தை டி. ஆர் தான் படித்த மயிலாடுதுறை ஏபிசி கல்லூரிலேயே படம் இயங்கினார். மயிலாடுதுறை ரயில் நிலையம், மாயவரம் தெருக்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த இடங்கள் புதிது.
இப்படி மயிலாடுதுறை களமாக்கி இப்போது வரை எந்த படப்பிடிப்பும் நடக்க வில்லை. ஒரு தலை ராகம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் பட்டி தொட்டியில்,ரேடியோ பெட்டியிலும் பல முறை ஒழித்தது. முதல் படத்திலேயே பாடல் ஆசிரியராகவும், இசையமைப்பாளராகவும் டி. ஆர் அவதாரம் எடுத்து மக்களை மிகவும் எளிதாக கவர்ந்துள்ளார். இது மற்ற இசையமைப்பாளர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்களுக்குள்ளே சலசலப்பு உண்டாக்கியது.
மேலும் படத்தின் எமோஷன் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் இயக்குனராக டி ஆர் வந்தபோது இங்கு இயக்குனர்கள் எடுக்காத கதைகளில் இல்லை என கூறும் அளவிற்கு ஸ்ரீதர், முத்துராமன், கே பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா என பல முன்னணி இயக்குனர்கள் வெவ்வேறு காலங்களில் கலக்கிக் கொண்டிருந்த காலம். புதிதா யார் வந்தாலும் இதிலிருந்து விலகி என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இத்தனை போட்டிகளை மீறி தனது திறமையை வெளிகொண்டு வந்தார் டி.ஆர். இவர் படங்களில் பாடலை படமாக்க போடும் செட்டுகளும் அதிக வரவேற்ப்பு இருந்தது. பொதுவாக செண்டிமெண்ட் தான் டி.ஆருக்கு கை கொடுத்தது, பல ரைமிங் வசனங்களை தாண்டி அவரை மக்களிடம் பிரபலப்படுத்தியது.
இந்த முகம் ஹீரோவுக்கு செட்டே ஆகாது… தவறான சிவாஜியின் கணிப்பு !
கதாநாயகர்கள் என்றாலே பளபள என முகத்தை வைத்துக்கொண்டு இருந்த காலத்தில் எதை பற்றியும் கவலை இல்லமல் முகம் முழுக்க மண்டி கிடைக்கக்கூடிய தாடி, சிலுப்பி கொள்ளும் முடி என ஹீரோக்களுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் நடிக்க வந்து ஹீரோவாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக நடிப்பில் சில கட்டுபாடுகளை வைத்திருந்தார் டி.ஆர். அதில் முக்கியமானது கதாநாயகிகளை தொட்டு நடிக்க கூடாது. இவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஹீரோயினை தொடாமல் நடித்ததும் தனி ஸ்டைல் தான். பல டூயட் பாட்டுகளிலும் கலர் புல்லாக ஆடை அணிந்து தனியாக ஆடி புரட்சி படைத்தவர்.
அதை அடுத்து பொன்னான மனசே என்று பாடினால் அதே மாதிரி தாடி வளர்த்து தாளம் தட்டுவதும் என தனி ரசிகர் கூட்டம் டி.ஆருக்கு உருவாக்க ஆரம்பித்தது. கதை, திரைக்கதை. வசனம், பாடல், இயக்கம் மற்றும் இசை உள்ளிட்ட பல வேலைகளை இவர் ஒருவரை மேற்கொண்டார். வேறு இயக்குனர்களின் படங்களிலும் டி.ஆர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு தயாரிப்பு திரைப்படம் விநியோகம் இதெல்லாம் கூட ஒரு கை பார்த்தார் டி.ஆர்.