தனது காதலிக்காக பார்த்திபன் உடன்கட்டை ஏறிய திரைப்படம்தான் ‘பாரதி கண்ணம்மா’. இந்த படம் தான் இயக்குனர் சேரனின் முதல் படம்.
கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், வடிவேலு, ராஜா, இந்து, ரஞ்சித் உள்பட பலர் நடித்திருந்தனர். தேவா இசையில் உருவான இந்த படத்தை சேரன் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஃபாசில் இயக்கிய கலகலப்பான காமெடி படம்.. டெலிபோன் டைரக்ட்ரியால் ஏற்பட்ட குழப்பம்..!
ஊரில் பெரிய மனிதர் விஜயகுமார், அவருடைய ஒரே மகள் மீனா, அவரை செல்லமாக வளர்ப்பார். அவரது வீட்டில் வேலை செய்பவர் பார்த்திபன். முதலில் சாதாரணமாக பழகும் பார்த்திபன் – மீனா இடையே கொஞ்சம் கொஞ்சமாக காதல் ஏற்படும். ஆனால் பார்த்திபன், மீனா வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பார்த்திபன் மீனாவை காதலிக்க தயங்குவார்.
மீனா அடிக்கடி தனது காதலை வெளிப்படுத்தும்போது பார்த்திபன் ‘இதெல்லாம் தவறு, நாங்கள் வேறு, நீங்கள் வேறு என்று கூறி ஒவ்வொரு முறையும் மறுப்பார்.
இந்த நிலையில்தான் மீனாவின் சகோதரர் ராஜா, பார்த்திபனின் சகோதரி இந்துவை காதலிப்பார். இந்த காதல் விஜயகுமாருக்கு தெரிய வந்ததும் ‘நம்ம என்ன ஜாதி, அவங்க என்ன ஜாதி’ என்று ராஜாவை திட்டுவார். அப்போது பார்த்திபன் மற்றும் மீனா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாகவே பேசிக்கொள்ளும் காட்சிகள் படத்தில் இருக்கும்.
மணிவண்ணன் – பாக்யராஜ் இடையே கத்திச்சண்டை.. புதுமையான விளம்பரத்தால் சூப்பர்ஹிட் ஆன படம்..!
இதனையடுத்து மீனாவுக்கு விஜயகுமார் மாப்பிள்ளை பார்ப்பார். ஒவ்வொரு மாப்பிள்ளையையும் ஒவ்வொரு காரணம் கூறி மீனா தட்டிக் கழிப்பார். இந்த நிலையில்தான் மீனா ஒருவரை காதலிக்கிறார் என்பது விஜயகுமாருக்கு தெரிய வரும். இதனையடுத்து அவர் பார்த்திபனிடம் அருவாளை கொடுத்து மீனாவின் மனதை யாரோ ஒருத்தன் கெடுத்துவிட்டான், அவனை வெட்டிவிவிட்டு வா என்று கூறுவார். மீனா காதலிப்பது பார்த்திபனை தான் என்பது தெரியாமல் அவர் இதை கூறுவார்.
இந்த நிலையில் ஒரு வழியாக மீனாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து விடுவார் விஜயகுமார். விடிந்தால் கல்யாணம், இரவில் கூட பார்த்திபனை சந்தித்து, ‘எங்கேயாவது என்னை அழைத்துக் கொண்டு சென்று விடு’ என்று கெஞ்சுவார். ஆனால் தனது முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது என்று கூறி ‘நீ உன் அப்பா பார்த்த மாப்பிள்ளையே கட்டிக்கொள்’ என்று கூறுவார். இந்த நிலையில் வேறு வழியின்றி மீனா கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொள்வார். இதனால் பார்த்திபன் அதிர்ச்சியடைவார்.
மீனாவின் உடல் எரிக்கப்படும்போது, எல்லோரும் சோகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் மட்டும் திடீரென எரியும் மீனாவின் கொள்ளியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வார். அதன் பின்பு தான் விஜயகுமாருக்கு மீனா காதலித்தது பார்த்திபன் என்று தெரியவரும். அடுத்து அவர் மனம் திருந்தி ராஜாவுக்கும் இந்துவுக்கும் திருமணம் செய்து வைப்பார்.
40 வருடங்களுக்கு முன்பே திகில் படம் எடுத்த மணிவண்ணன்.. 200 நாள் ஓடிய வெற்றிப்படம்..!
கடந்த 90களில் தென்மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஜாதி பிரச்சனை ஏற்பட்டிருந்ததால் இந்த படம் தென்மாவட்டங்களில் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மிகப்பெரிய வெற்றி பெற்றது.