எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்திற்க்கு பின்னால் இப்படி ஒரு பூகம்பம் இருக்கிறதா..

By Velmurugan

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை பொறுத்தவரை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு. இது அன்றைய சினிமாவை பார்த்தவர்களுக்கும், அதனுடன் பயணித்தவர்களுக்கும் நன்கு தெரியும். எம்.ஜி.ஆரை நம்பி வந்தவர்கள் நிறைய பேர் நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக இந்த இருவரை சொல்லலாம். ஒருவர் பத்திரிக்கையாளர் மணியன் மற்றொருவர் ஜோதிட வித்துவான் வி. லாட்ச்சுமணன். இவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இருந்தவர்கள்.

குறிப்பாக மணியன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ஜப்பானில் படமாக்க எம்ஜிஆருக்கு உதவி புரிந்தவர். அந்த விசுவாசத்திற்கு நன்றியாக எம்ஜிஆர் தந்த பரிசுதான் உதயம் புரொடெக்சன். இது எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்த நிறுவனம்.

ஒருநாள் மணியன் வீட்டுக்கு சென்ற எம்.ஜி.ஆர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நீங்களும் வித்துவான் லட்சுமணன் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க நான் நடித்து தருகிறேன் என்று எம்.ஜி.ஆர் திடீர் என கூறியுள்ளார். உடனே மணியன் அது எப்படி தயாரிக்க முடியும் என்று அதிர்ச்சியுடன் கேட்டுள்ளார்.

அதற்கு ஒரு பேப்பர் பேனாவை எடுத்து வர சொல்லி அதில் உதயம் நிறுவனத்துக்காக நான் ஒரு படம் நடிக்கிறேன் என்று எழுதி கீழே தன் கையொப்பத்தையும் இட்டு, இதை பத்திரிகைகளுக்கு கொடுங்கள் என்று மட்டும் கூறியுள்ளார்.

அடுத்த நாளே அவர்கள் நட்சத்திர தயாரிப்பாளராக மாறி விட்டார்கள். அப்படி எம்.ஜி.ஆர் கால்சிட் கொடுத்து உருவான படம் தான் இதயம் விணை. அடுத்து அவர் இரட்டை வேடம் போட்டு நடித்த படம் சிரித்து வாழ வேண்டும். இந்த படத்தை விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமணியம் எஸ் எஸ் பாலன் என்ற பெயரில் இயக்கினார். இரண்டு படங்களும் வெற்றி பெற்று மணியன் மற்றும் வித்துவான் வே.லட்சுமணனுக்கு வசூலை அள்ளி தந்தது.

அன்றைய தமிழ் திரை உலகில் உதயம் புரொடெக்சன் திடீரென்று உருவாக்கி பிரபலமான நிறுவனமாக மாறிவிட்டது. இந்த இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு மறுபடியும் எம்.ஜி.ஆரை மீண்டும் நடிக்க வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதயம் புரொடெக்சன் நிறுவனத்திற்கு தோன்றியது.

மேலும், எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாக கதை சொல்லும் ஒரு கதை ஆசிரியர் வேண்டும். அப்படி கிடைத்தாலும் எம்.ஜி.ஆருடன் ஒத்துப் போகிற அளவிற்கு அந்த கதை ஆசிரியர் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூறுகின்ற நியாயமான மாற்றங்களை ஏற்று கொள்ள கூடியவராக இருக்க வேண்டும். அப்படி பட்ட கதை ஆசிரியரை தேடி அலைந்ததில் எங்கும் அப்படி யாரும் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில் தான் இருவரும் இந்தியில் வெளிவந்த ஒரு படத்தைப் பார்த்தார்கள். அந்த படம் எம்ஜிஆருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார்கள். அந்த படத்தின் தமிழ் ரீமிக்ஸ் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள். இந்த செய்தி எம்ஜிஆர் காதுகளுக்கு எட்டியது. உடனே உதயம் புரொடெக்சன் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்து பேசினார்.

என்ன படம் அது யாருடைய படம் என்று கேட்டதற்கு பதில் சொன்னார்கள் அது சாந்தாராமின் தே காந்தி பாரத். சாந்தாராமை எம்.ஜி.ஆர் தனது குருவாக வைத்து மதித்தவர். சாந்தாராமின் படம் என்றால் போட்டு காட்டுங்க பார்க்கலாம் என கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் படத்தை பார்த்தால் ஒரு ஜெயிலர் கொடூரமான கைதிகளை தனது பொறுப்பில் வெளியே கொண்டுவந்த தனி இடத்தில் வைக்க அவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயிலரை கொலை செய்துவிட்டு கைதிகள் தப்பி  ஓடி விடுகிறார்கள். இது தான் இந்தி படத்தின் கதை. படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் எந்த கருத்தும் கூறாமல் வெளியே சென்றுள்ளார்.

அவரை தொடர்ந்து சென்ற மணியனும், வித்துவான் லட்சுமணனும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் வாங்கி விடலாமா என்று கேட்டார்கள். இந்த படத்தை அப்படியே எடுக்க வேண்டும் என்றால் எனக்கு பொருத்தமாக இருக்காது. கிளைமாக்ஸ் மாற்ற வேண்டும். ஜெயிலரால் வெளியே அழைத்துவரப்பட்ட கைதிகள் இறுதியில் திருந்தினார்கள் என முடிய வேண்டும்.

எனது படம் பார்க்க வருகிறவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். இந்த படத்தை உண்மையான கைதிகள் பார்த்தாலும் அவர்கள் மனம் திறந்த வேண்டும். அப்படிப்பட்ட கருத்தை தான் நாம் சொல்ல வேண்டும். இதற்கு நீங்கள் சம்மதித்தால் ரைட்ஸ் வாங்குங்கள் இல்லையென்றால் என்னை விட்டு விடுங்கள் வேறு யாராவது வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.

கணவனின் மறைவுக்கு பின் கண்களை திறக்க முடியாத சரோஜாதேவி! கன்னடத்து பைங்கிளியின் திருமண வாழ்வின் மறுபக்கம்!

எம்.ஜி.ஆரை பேச்சை கேட்டதும் உதயம் புரொடெக்சன் அதிபர்கள் உடனே உங்களை வைத்து தான் நாங்கள் படம் எடுக்க விரும்புவதாக கூறி எம்.ஜி.ஆர் கூறிய படியே படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றி அமைக்க முடிவெடுத்துள்ளனர்.

அதற்கு எம்.ஜி.ஆர் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றி எடுக்க போவதாக இருந்தால் சாந்தாராமிடம் முறையாக கூறி அதற்கும் அனுமதி வாங்கி வருமாறும் அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரின் கருத்து சாந்தாராமிடம் கூறி அனுமதி பெற்று கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றி படத்தை எடுத்து முடித்தனர்.

மேலும் படமும் வெளியே வந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் தான் பல்லாண்டு வாழ்க.  எம்.ஜி.ஆர் பொறுத்தவரை தன்னை தேடி வரும் வாய்ப்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. தன்னுடைய படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு அதன் மூலம் நம்பிக்கையூட்டும் வகையில் எந்த கருத்தை சொல்ல போகிறோம் என்பதற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதற்கு உதாரணம் தான் இந்த பல்லாண்டு வாழ்க திரைப்படம்.