இந்தியாவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டதை அடுத்து உலகெங்கிலும் இருந்து இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்க, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து நிலவின் தென் துருவத்தை அடைந்த 3வது நாடு இந்தியா என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நிலவினை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்பியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி இந்த விண்கலம் பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து அங்கிருந்து தனது நிலவு பயணத்தை தொடங்கிய சந்திராயன் 3 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு சந்திரனின் சுற்றுவட்ட பாதையை நோக்கி சென்றது. இந்த பயணம் ஐந்து நாட்கள் தொடர்ந்து நிலையில் கடந்த ஐந்தாம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதை அடுத்து இந்த லேண்டர் சந்திரனை நோக்கி பயணம் செய்தது. படிப்படியாக சந்திரனில் இறங்கும் வகையில் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்க திட்டமிட்ட நிலையில் 5:30 மணியிலிருந்து லேண்டரை தரையில் இருக்கும் பணியினை விஞ்ஞானிகள் தொடங்கிவிட்டனர்
உயரம் குறைக்கப்பட்ட நிலையில் சந்திரனை நோக்கி பயணம் செய்த லேண்டர் 800 மீட்டர் தொலைவில் இருந்த போது தரையிறங்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. அந்த இடம் பாதுகாப்பானது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்த நிலையில் மீண்டும் உயரம் குறைக்கப்பட்டது. இறுதியாக 6.02 மணிக்கு 100 மீட்டர் தொலைவில் இருந்து மீண்டும் ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பியது. இதனை அடுத்து 6.04 மணிக்கு சரியாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்.
இந்த வெற்றியால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவர் ஒருவர் கைதட்டி மகிழ்ச்சியை கொண்டாடினார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்றும் இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி இந்த நிகழ்வை நேரடியாக பார்த்து இந்திய விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அடுத்ததாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி செய்யப்படும் என்றும் சூரியனை ஆய்வு செய்யவும் முயற்சி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளை அடுத்து நிலவில் தரையிறங்கிய மூன்றாவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவை விட வல்லரசு நாடுகள் பல நாடுகள் இருந்தும் இந்தியா தான் இந்த சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திராயன் 2 தோல்வி அடைந்த நிலையில் அதிலிருந்து மனம் தளராமல் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் சந்திராயன் 3 விண்கலத்தை தயாரித்து அதை வெற்றிகரமாக சந்திரனில் தரையறுக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் என்னவெனில் சந்திரனின் தெற்கு துருவப் பகுதியை ஆராயவும், அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும் ஆகும். மேலும் சந்திரனின் மேற்பரப்பின் இரசாயனக் கலவை மற்றும் கட்டமைப்பை ஆராயவும், சந்திரனின் புவியியல் மற்றும் புவிவெப்பவியல் வரலாற்றைப் பற்றி அறியவும் உதவும்.