கலை உலக மார்க்கண்டேயன் என்று கொண்டாடப்படும் சிவக்குமார் 192க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1965 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஏவிஎம் தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் சிவகுமார். பிரபல நடிகர்களான சூர்யா கார்த்தியின் தந்தையான இவர் ஆரம்ப கட்டத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சினிமா துறைக்கு வந்துள்ளார்.
காதல் பற்றிய கேள்வி
ஒருமுறை நடிகர் சிவகுமாரிடம் திரைத்துறையில் யாரையும் நீங்கள் காதலிக்கவில்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்தவர் நானும் மனிதன்தான் 87 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன் என்றும் அதில் 15 கதாநாயகிகளுக்கு தன் மேல் விருப்பம் இருந்ததாகவும் சிவகுமாருக்கு ஐந்து கதாநாயகிகள் மீது ஈர்ப்பு இருந்ததாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் அதோடு சேர்த்து தான் ஒரு விதவைத் தாயின் மகன் என்றும் தாயின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டதால் இது போன்ற ஆசைகளை படப்பிடிப்பு தளத்தோடு விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.
மனைவியை புகழ்ந்த சிவகுமார்
தனது தாயார் பார்த்த லட்சுமி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட சிவக்குமார் தனது மனைவியை பற்றி கூறும்போது ஆடம்பரத்தை விரும்பாத எளிமையான பெண் என்று கூறியதோடு தனது மனைவியை போன்ற பெண்கள்தான் அதிக குடும்பங்களில் அம்மாக்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தனது மனைவியைப் போன்ற பெண்கள் தனக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வரம் என சிவகுமார் பெருமையுடன் கூறியுள்ளார்.
கல்விக்கு உதவி
ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்த சிவகுமார் தனது நூறாவது படம் வெளியான போது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்து தனது தாயாரின் நல்லாசியுடன் அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆரின் தலைமையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார். அந்த அறக்கட்டளையின் மூலமாக 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து தொடர்ந்து கல்வி பயில ஊக்கப்படுத்தினார். அதேபோல தனது உழைப்பினால் கட்டப்பட்டு 40 வருடங்கள் குடியிருந்த வீட்டை விற்க மனம் இல்லாமல் அனைவரும் கல்வி கற்க உதவியாக இருக்கும் வகையில் அகரம் பவுண்டேஷன் செயல்பாட்டிற்கு கொடுத்துள்ளார்.