ஜெயிலர் படத்தில் வெளியான இரு பாடல்களில் தமன்னா ஆடிய காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் ரஜினியின் பெருமையை பற்றிய பாடல் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் 4வது படத்தை தமிழின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் படங்களில் அண்மைக்காலமாக நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பது வாடிக்கையாக உள்ளது. பேட்ட படத்தில் தொடங்கி அண்ணாத்த வரை ரஜினி நடித்த பல படங்களில் நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற ரோலில் ஜெயிலராக நடிப்பது டீசரை பார்த்த உடனே உறுதியாகிவிட்டது. பேட்ட மாதிரி புல் ஸ்பீடான ஆக்சன் உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அண்மையில ஆடியோ லான்ச் நடந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸ் ஆக போகிறது.
இந்த படத்தில் ரஜினியின் பாட்டை விட தமன்னாவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட காவாலா பாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி படங்களில் பொதுவாக ரஜினியை மையமாக வைத்து தான் பாடல்கள் இருக்கும். அந்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெறும். இந்த படத்திலும் அப்படி பாடல்கள் இருக்கிறது. மற்ற படங்களை ஒப்பிடும் போது ஜெயிலர் படத்தில் குத்துபாடல் இடம் பெற்றுள்ளது. தமன்னா ஆடிய காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியை அந்த பாடலில் சும்மா பெயருக்கு சில ஸ்டெப் போட வைத்துவிட்டு தமன்னாவை வைத்து இயக்கி இருக்கிறார்கள். இந்தபாடல் வேறலெவலில் வரவேற்பை பெற்றுள்ளது.
சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?
காவாலா பாடல் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையில் 89 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. காவாலா பாடலை பயன்படுத்தி யூடியூபில் 5 லட்சம் ஷார்ட்ஸ் (Shorts) பதிவிடப்பட்டும் இருக்கிறது. அதேநேரம் ஹுக்கும் பாடல் 2 வாரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. காவாலா பாடல் இந்த அளவிற்கு வரவேற்பை பெற ஒரு காரணமும் இருக்கிறது.
அண்மையில் தமன்னா நடிப்பில் ஒடிடியில் ஒரு வெப் சீரியஸ் வெளியாகி இருந்தது. இந்த வெப் சீரியஸில் மிகவும் கவர்ச்சியாக தமன்னா நடித்திருந்தார். அந்த சமயத்தில் தமன்னா நடிப்பில் கவர்ச்சியான ஆட்டத்தில் காவால பாடல் வெளியானதால் வெப் சீரியஸின் பீக் வியூவர்ஸ்கள் காவாலா பாட்டினை கவனித்தார்கள். தமன்னா இப்படியான கவர்ச்சி ஆட்டம் போட்டது இதுவரை இல்லை என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. கூடுதலாக ரஜினி படம் என்பதும் பாட்டு இவ்வளவு ஹிட்டாக காரணம் என்று சொல்கிறார்கள்.
ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?
சரியான நேரத்தில் நெல்சன் , தமன்னாவின் காவாலா பாடலை வெளியிட்டது ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றும் சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் பல குத்துபாடல்கள் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றன. கடந்த இரு வருடம் முன்பு அல்லு அர்ஜூன் நடித்துள்ள படத்தில் ஓ சொல்றியா மாமா என்று சமந்தா ஆடிய பாட்டு அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அந்த யுக்தியை நெல்சன் கடைபிடித்து பாடலை சேர்த்திருப்பதாக சொல்கிறார்கள்.