சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போழுது மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் 12 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.
சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. படத்தில் அதிதி ஷங்கர் படத்தின் ஹீரோயினாக பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் மிஷ்கின், சுனில், மோனிஷா பிளெஸ்ஸி, யோகி பாபு, சரிதா மற்றும் பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மடோன் அஷ்வின் எழுதி இயக்கியுள்ளார். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி படம் முழுக்க வாய்ஸ் ஓவர் கொடுத்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மாவீரன் கதை ஒரு திருட்டு கதை என்ற தகவல் தற்பொழுது கிசுகிசுக்கப்படுகிறது.
மாவீரன் படத்தில் வரும் அந்த அசரீரி குரல் 2020 ஆண்டு வெளியான ஒரு கொரியன் படத்தின் சாயலை கொண்டுள்ளதாக ஒரு புறம் கூறப்படுகிறது. அந்த கொரியன் படத்தின் ஹீரோ ஒரு கார்டுன் ஆர்டிஸ்ட் அவருக்கு இந்த அசரீரி குரல் மூலம் சில சம்பவங்கள் நடப்பது போல கதை அமையும். மாவீரன் படத்திலும் ஹீரோ ஒரு கார்டுன் ஆர்டிஸ்ட், அடுத்ததாக படம் முழுவதும் அசரீரி குரல் வருவதும் உண்மை.
ஆனால் இந்த படத்தின் கதை முழுவதுமாக திருடப்பட்டது என மற்றோரு பக்கம் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வேலாயுதம் படத்தில் கோ டிரெக்ட்டராக இருந்த பினு சுப்பிரமணியன் கதை தான் இந்த மாவீரன் கதை என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அவர் வைத்த டைட்டில் அப்பார்ட் மெட். இந்த கதையில் ஹீரோ எலக்டிரிசியன்.
கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக உருவான இந்த கதையில் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து இந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பினு சுப்பிரமணியன். அப்போது மண்டேலா படத்தின் கேமராமேன் மூலமாக யோகிபாபுவை தொடர்பு கொண்டு இந்த படத்தின் கதையை யோகிபாபுவிடம் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கனவு கன்னியாக இருக்கும் முன்னணி நடிகைகள்!
இந்த கதை யோகிபாபு மூலமாக தான் தற்பொழுது வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாவீரன் படத்தில் யோகிபாபு எலக்டிரிசியன் வேலை பார்ப்பவராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கதையை பினு சுப்பிரமணியன் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது உறுதியானதால், படம் வெளியான இந்த நிலையில் இந்த கதைக்கான உரிமை தொகையை பெற வேண்டும் என்பதற்காக பினு சுப்பிரமணியன் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறப்படுகிறது.
பினு சுப்பிரமணியனின் அப்பார்ட் மெட் கதையும், 2020ல் வெளியான கொரியன் கதையையும் இணைந்து தான் மாவீரன் கதை உருவாகியுள்ளது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.