தந்தையின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கிய இளைய திலகம்

By Sankar Velu

Published:

சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகர். இவரது சிரிப்போ கள்ளங்கபடமில்லாதது. சின்னத்தம்பியைப் பார்த்தால் தெரிந்துவிடும். இவர் தன் பார்வையாலேயே ரசிகர்களை மட்டுமல்லாமல் தாய்க்குலங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடியவர். நடிகர்களுள் மிக ஒழுக்கமான நல்ல மனிதர். இவரது தந்தையோ நடிகர் திலகம். எந்த நடிகராக இருந்தாலும் நடிக்கும் போது அவரது சாயல் தென்படும்.

Prabhu2
Prabhu2

ஆனால் இளையதிலகம் பிரபு மட்டும் அதில் விதிவிலக்கு. இதுதான் ஆச்சரியம். பிரபு நல்ல ஒழுக்கமான நடிகர். என்ன தான் இருந்தாலும் பிரபு சிவாஜியின் மகனாக இருந்தபோதும் நடிக்கும் போது அவரது சாயல் கொஞ்சம் கூட இருக்காது. சாதாரணமாக நடிக்கும் பிற நடிகர்களுக்கே இந்த சாயல் வந்து விடும். ஆனால் பிரபுவுக்கு வராதது தான் ஆச்சரியம். இதை அவரே அறிந்திருக்கிறார்.

தனது சொந்த திறன்களை எவ்வாறு அதிகரிப்பது, சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி என்பதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். சிவாஜியைப் பொறுத்தமட்டில் நடிப்பு என்பது அவருக்கு ஒரு பேரார்வம். படம் ப்ளாக்பஸ்டராக இருந்தாலும் ஒரு காட்சி சரியாக வரவில்லை என நினைத்தால் பல நாட்கள் ஆனாலும் நினைத்தபடி நடித்துக் கொடுத்து விடுவார்.

Sivaji Prabhu
Sivaji, Prabhu

பிரபுவுக்கு நடிப்பு ஒரு தொழிலாக இருந்ததால் இயக்குனரை பின்தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார். பிரபு நடித்த படங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் சூப்பர்ஹிட்.

சிறந்த திரைக்கதைகளுக்காக அவர் காத்திருந்ததால் பல படங்களில் நடிக்க முடியாமல் கூட போயிருக்கலாம். ஆனால் அதற்காக அவர் வருத்தப்படவில்லை. சினிமாவிலேயே இருந்தார். படம் தயாரிப்பு, துணை நடிகராக நடிப்பது என்று அவரது வேலையை திறம்படச் செய்து வந்தார்.

Vetri vizha
Vetri vizha

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த சந்திரமுகியில் அவரது நடிப்பு செம மாஸ். படமும் அவரது சொந்த படம் தான். உலக நாயகன் கமலுடன் அவர் இணைந்து நடித்த வெற்றி விழா செம. இதுவும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தான். அந்த வகையில் பிரபு சில நேரங்களில் வித்தியாசமான கதைக்களத்திற்காக காத்திருந்து இருக்கலாம்.

அவரது மகன் விக்ரம்பிரபு கும்கியில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பேர் வாங்கினார். தொடர்ந்து நடித்தும் வருகிறார். இவரும் வித்தியாசமான கதைகளத்திற்காகக் காத்து இருக்கிறார்.

பிரபு நகைச்சுவை, கிராமப்புற குடும்ப நாடகம், குடும்ப நகைச்சுவை போன்ற கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். கந்தா, கடம்பா, கதிர்வேலா படத்தில் இவரது நகைச்சுவை சூப்பராக இருக்கும். பில்லா படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார். 2000 களில் தனது சொந்த உரிமையில் ஒரு சிறந்த துணை நடிகரானார்.

Prabhu Vikram Prabhu
Prabhu, Vikram Prabhu

இந்திய சினிமாவில் உள்ள அனைத்து தந்தை மகன் இரட்டையர்களிலும் மிகக் குறைவான மகன்கள் மட்டுமே தந்தையையும் நடிகர்களாகப் பெற்று இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் கார்த்திக், தர்ஷன், சஞ்சய் தத், பிரசாந்த், சிம்பு.