ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் வெளியாகியுள்ள 3 கேமிங் லேப்டாப்கள்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Bala Siva

Published:

கடந்த சில ஆண்டுகளாக கேமிங் லேப்டாப்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது புதிய 3 கேமிங் லேப்டாப்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமில் லேப்டாப்களில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

HP Omen Transcend 16 என்ற லேப்டாப் 13வது ஜெனரல் இன்டெல் கோர் i9-13900HX பிராஸசர் மற்றும் NVIDIA GeForce RTX 4070 கிராபிக்ஸ் கார்டு மூலம் இயக்கப்படுகிறது. இது 16 இன்ச் WQXGA 240Hz IPS டிஸ்ப்ளே, 16GB ரேம் மற்றும் 1TB SSD ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

அதேபோல் HP Omen 16 லேப்டாப் 13வது ஜெனரல் இன்டெல் கோர் i7-13700HX பிராஸசர் மற்றும் NVIDIA GeForce RTX 4060 கிராபிக்ஸ் கார்டு மூலம் இயக்கப்படுகிறது. இது 16-இன்ச் முழு-எச்டி 165 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஆகியவற்றை கொண்டுள்ளது.

மூன்றாவதாக HP Victus 16 என்ற லேப்டாப் 13வது ஜெனரல் இன்டெல் கோர் i7-13700H பிராஸசர் மற்றும் NVIDIA GeForce RTX 4050 கிராபிக்ஸ் கார்டு மூலம் இயக்கப்படுகிறது. இது 16.1 இன்ச் முழு-எச்டி 165 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட மூன்று லேப்டாப்களும் விண்டோஸ் 11 நிறுவப்பட்டவை. மேலும் கீபோர்டு, வெப் கேமிரா, மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் வசதியை கொண்டது.

HP Omen Transcend 16 லேப்டாப்ப்ன் விலை ரூ.1,59,999 என்றும், HP Omen 16 லேப்டாப் விலை ரூ.1,04,999 என்றும், HP Victus 16 லேப்டாப் விலை ரூ.59,999 என்றும் இந்தியாவில் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.