இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தை என்பதால் உலகில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் இந்தியாவில் தங்கள் தயாரிப்பு ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் Tecno Camon என்ற நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜூலை 7ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போன் சுமார் ரூ.37,000 என்ற அதிக விலையில் இருந்தாலும் இதில் உள்ள கூடுதல் சிறப்புகள் அதன் விலைக்கு மதிப்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
Tecno Camon 20 பிரீமியர் 5G இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இந்நிறுவனம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த ஃபோன் இந்நிறுவனத்தின் இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tecno Camon 20 Premier 5G ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 பிராஸசர், 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 108MP பிரதான சென்சார், 50MP அல்ட்ராவைட் சென்சார், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகிய குவாட்-கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. செல்பி கேமிராவுன் உண்டு.
இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுவதால் சார்ஜிங் நிற்குமா என்ற சந்தேகம் தேவையில்லை. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு சார்ஜ் நிற்கும்.
டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜியின் விலை இந்தியாவில் சுமார் ரூ. 36,999 என எதிர்பார்க்கப்படுகிறது.. இது டெக்னோ மாடல்களில் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். ஆனாலும் இந்த போனில் அதிக விலைக்குரிய சக்திவாய்ந்த வன்பொருள் மற்றும் ஈர்க்கக்கூடிய கேமரா அமைப்பு உள்ளது.
சிறந்த கேமராவுடன் கூடிய உயர்நிலை ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், Tecno Camon 20 Premier 5G சிறந்த தேர்வாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
