இந்த ஒரு மருந்துச் செடி இருந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாமா? நன்மைகள் நிறைந்த கற்றாழை…!

By Sowmiya

Published:

கற்றாழை இயற்கை கொடுத்த ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். ஆயிரக்கணக்கில் செலவிட்டு பல மருந்துகளை வாங்கி அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் நாம் பயன்படுத்துவதை காட்டிலும் இந்த ஒரே ஒரு தாவரம் அழகு ஆரோக்கியம் என அனைத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் நமக்கு நல்லதொரு தீர்வினை தரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

aloe 2163120 1280

கற்றாழைகளில் சோற்றுக்கற்றாழை, பேய் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, கருங் கற்றாழை, ரயில் கற்றாழை, செங்கற்றாழை என பல கற்றாழை வகைகளை நாம் காண முடியும். இவற்றுள் சோற்றுக்கற்றாழை தான் அனைத்து பயன்பாடுகளுக்கும் உகந்ததாக இருந்து வருகிறது.  மனிதர்களுக்கு நன்மை தரக்கூடிய 22 அமினோ அமிலங்களில் 20 அமினோ அமிலங்கள் கற்றாழையில் இருப்பதாக கூறப்படுகிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட மாதவிடாய் பிரச்சனைகள், நீர் கட்டிகள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பதால் இந்தக் கற்றாழையை குமரி , கன்னி என்றும் அழைப்பதுண்டு.

இப்படி பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கிய இந்த கற்றாழை கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் எப்படி செயல்படுகிறது? எப்படி பயன்படுத்தலாம் என்பதை நாம் பார்க்கலாம்.

கற்றாழையில் உள்ள ஜெல்லினை பயன்படுத்தும் பொழுது ஏழு முதல் 10 முறை தண்ணீரில் நன்கு அலசி அதன் பின் பயன்படுத்தியது அவசியம்.

கூந்தல் பராமரிப்பில் கற்றாழை:

கற்றாழை கூந்தல் பராமரிப்புக்கு உதவக்கூடிய மிகச் சிறந்த பொருள். இந்தக் கற்றாழையை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் செய்தால் அது வறண்ட கூந்தலை சரி செய்து இளநரையை போக்குகிறது. உடல் சூட்டை தணித்து குளுமை தருகிறது.

கற்றாழை ஹேர் மாஸ்க் செய்யும் முறை:

ஒரு துண்டு கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதி, ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை ஒன்றாய் சேர்த்து ஒரு பேஸ்ட் வடிவிற்கு கலந்து கொள்ளவும்.

இதை கூந்தலின் நுனி முதல் அடி வரை படும் படி அப்ளை செய்யவும். சில நிமிடங்களுக்குப் பிறகு மென்மையான ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு இதனை அலசி விடவும்.

கூந்தல் மென்மையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

aloe vera 3708738 1280

சரும பராமரிப்பில் கற்றாழை:

கற்றாழை சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் வெட்டுக் காயங்கள் தீ புண் போன்றவற்றிற்கும் மருந்தாகவும் பயன்படும். முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி கருவளையம் மறையவும் உதவி புரிகிறது. சருமம் வயதாவதை தடுத்திட கற்றாழை ஒரு நல்ல தேர்வு. இந்தக் கற்றாழையை பயன்படுத்தி செய்யும் ஃபேஸ் பேக் முகத்தை பளிச்சிட வைத்து சூரிய ஒளியிலிருந்தும் பாதுகாத்திடுகிறது. இந்தக் கற்றாழையைக் கொண்டு பல வகையான ஃபேஸ்பாக்குகள் செய்ய இயலும் வறண்ட சருமம் எண்ணெய் சத்து நிறைந்த சருமம் அதிக உணர்திறன் கொண்ட சருமம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நாம் ஃபேஸ் பேக் செய்ய இயலும். அனைவரும் பயன்படுத்த தகுந்த ஒரு ஃபேஸ் பேக்கை பார்க்கலாம்.

கற்றாழை ஃபேஸ் பேக் செய்யும் முறை:

கற்றாழை ஜெல்லினை எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு  சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்யவும்.

இதனை முகத்தை க்ளன்ஸ் செய்த பிறகு முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.முகம் உடனடியாக பளிச்சிடுவதை காணலாம்.

கற்றாழை அதீத குளிர்ச்சி தன்மை உடையது எனவே சூரிய வெளிச்சம் இருக்கும் பொழுதே நாம் இதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாலை வேளைகளிலோ இரவிலோ பயன்படுத்தினால் சளி தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.