ஒரு லட்சத்திற்கும் மேல் விலை.. அப்படி என்ன இருக்குது Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனில்?

By Bala Siva

Published:

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அனைத்துமே மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெறும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகும் சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy S23 Ultra என்ற மாடல் ஸ்மார்ட் போன் குறித்த முழு விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்களை தற்போது பார்ப்போம்.

Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 1 பிராஸசர் கொண்டது. 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 108MP பிரதான சென்சார், 12MP அல்ட்ராவைடு சென்சார், 10MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 10MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் கேமிராக்களை கொண்டது. இந்த போன் இந்தியாவில் ரூ.104,999 என விற்பனையாகிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* Qualcomm Snapdragon 8 Gen 1 பிராஸசர்
* 8 ஜிபி, 12 ஜிபி ரேம்
* 512ஜிபி, 1டிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 08MP பிரதான சென்சார், 12MP அல்ட்ராவைடு சென்சார், 10MP டெலிஃபோட்டோ சென்சார், 10MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் கேமிரா
* 40MP செல்பி கேமிரா
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் இந்தியாவில் Phantom Black, Green, Cream மற்றும் Graphite ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனின் நிறை, குறைகளை தற்போது பார்போம்.

நிறைகள்:

* சக்திவாய்ந்த பிராஸசர்
* பிரமிக்க வைக்கும் டிஸ்ப்ளே
* சிறந்த கேமரா அமைப்பு
* நீண்ட கால பேட்டரி
* S Pen சப்போர்ட்

குறைகள்:

* விலை உயர்ந்தது
* ஹெட்ஃபோன் ஜாக் இல்லை
* ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யும் வசதி இல்லை.