நமது உடல் ஆரோக்கியத்திற்க்கும் வயிற்றுப் பகுதிக்கும் அதிக சம்பந்தம் உண்டு. வயிறு சரியில்லை என்றால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். அப்படி வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் காலைக்கடனை சிறப்பாக முடிப்பது தான்.
காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும். ஆனால் பலர் அவ்வாறு செய்யாமல் சாப்பிட பின்னரே வயிற்றின் லோடு அதிகமானதும் கழிப்பறைய நோக்கி ஓடுவார்கள்.
அப்படி சாப்பிட்ட உடனேயே மலம் கழிப்பது சரியா என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுக்கும் வேலையை வயிற்றுப் பகுதி செய்கிறது. இதன் கீழ் உணவில் இருந்து உருவாகும் கழிவு பொருட்களை வெளியேற்றுவதற்காக உணவு கால்வாய் முழுவதும் மின்சார அலை உருவாகிறது. இந்த அலைகள் அனிச்சையாக இருக்கும் போது முழு உணவு கால்வாயிலும் ஒரு இயக்கம் உள்ளது.
இதில் இருந்து பெருங்குடல் வரை எட்டு மீட்டர் பயணத்திற்கு பிறகு கழிவு பொருட்கள் வெளியேறுகின்றன. ஆனால் சிலருக்கு உணவை சாப்பிட்ட பிறகு தான் வயிற்றில் இந்த செரிமான செயல்பாடுகள் வேகமாக மாறும். எனவே தான் சிலர் சாப்பிட்டவுடனேயே கழிவறைக்கு செல்கின்றன.
ஆனால் இது இயற்கையான விஷயம் தான், ஆனால் சில நோய்களால் இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. எனவே எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். இந்த நபர்களுக்கு மன அழுத்தம் பிரச்சனை அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் இதற்கு காரணம். இதனுடன் அலர்ஜி, குடல் நோய், சிலியா, இரைப்பை உணவு ஒவ்வாமை, உடல் தொற்று போன்ற பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிட உடனேயே கழிவறைக்கு செல்வார்கள்.
எளிதாக கிடைக்கும் பலா பழத்தில் இவ்வளவு நன்மைகளா…. பல தித்திப்பான பலன்கள் இங்கே!
ஆனால் சில ஆரோக்கிய மாற்றங்கள் செய்வதால் இதனை குணப்படுத்திவிடலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, தூங்குவது போன்ற விஷயங்களில் கவனம் வேண்டும். சாப்பிட்ட உடனே கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உணவு செரிக்காமல் வெளியே வரும் என்று சிலருக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் டாக்டர்கள் அப்படி இல்லை என்றும் வெளியேறும் கழிவு பொருட்கள் முந்தைய நாளினுடையது என்றும் கூறியுள்ளார்கள். பொதுவாக நீங்கள் சாப்பிட்ட உணவு செரித்த 18 முதல் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியேறும்.