உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விரைவில் ChatGPT-ஐ தனது கார்களில் இணைக்க முடிவு செய்திருப்பதாகவும் இதன் மூலம் பல பயன்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
ChatGPT டெக்னாலஜியை தங்கள் கார்களில் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் இதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ChatGPT காரில் பொருத்தப்பட்டு விட்டால் ஓட்டுநர்களுக்கு சில தகவல்களை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வசதி மூலம் காரில் இருந்து கொண்டே பல உதவிகளை பெற முடியும் என்றும் காரில் ஒலிக்கும் இசையை கட்டுப்படுத்த, தொலைபேசி அழைப்புகளை சரிசெய்ய, டிரைவரால் முடியும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மெர்சிட்டிஸ் கார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறிய போது தங்களது கார்களில் ChatGPT வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடிந்தால் அது தொழில் நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என்றும் இது எங்கள் கார்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் நாங்கள் மிகப்பெரிய ஆற்றலை வடிவமைக்க கூடிய திறனை கொண்டிருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ChatGPT டெக்னாலஜியை இணைத்தால் என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்:
* காரின் அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்
* காரின் கட்டுப்பாடு, வழிசெலுத்தல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகளைக் கட்டுப்படுத்தும்.
* தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும்
* அருகிலுள்ள இடங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை வழங்கும்.
* ஓட்டுநர்கள் தங்கள் வழியைக் கண்டறிய உதவும்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் ChatGPT ஒருங்கிணைப்பு என்பது வாகனத் துறையில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தின் ஒரு அடையாளமாகும். AI தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால் கார்களில் இதனை பொருத்துவதும் ஒரு சாத்தியக்கூறு தான் என்பது குறிப்பிடத்தக்கது.