மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் பரபரவென தயாராகி வரும் படம் மாமன்னன். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பகத் பாசில், கீர்த்திசுரேஷ் இவர்களுடன் உதயநிதி ஸ்டாலினும் நடித்துள்ளார். வைகைப்புயல் இந்தப் படத்துல முதன்முதலாக ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்கில படையிருந்தும் பயந்த சனம் என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது….
இந்தப் படத்தைப் பத்தி நான் சொல்லும்போது இதுதான் கடைசி படம் கடைசி படம்னு சொல்லியே வடிவேலு சார்ட, கீர்த்தி சுரேஷ்ட எல்லாம் கால்ஷீட் வாங்கிட்டேன். அடுத்து ஒரு படம் உலகநாயகன் கமல் சாரோட படத்துல நடிக்கப் போறதா சொன்ன உடனே அதைக் கேட்டு ரொம்ப அப்செட்டானது மாரிசெல்வராஜ் சார் தான். என்ன ஏமாத்திட்டீங்க…?ன்னு சொன்னாரு.
அதே மாதிரி ரகுமான் சாரும் என்ன கடைசி படம்னு சொன்னீங்க…? ஆமா சார் உலகநாயகன் கமல் சாரோட படம்னு சொன்னேன். அப்போ இதுதான் பர்ஸ்ட் படம்னு வாழ்த்தினாரு.
மாரி சார் வந்து இந்தக் கதையை என்கிட்ட சொல்லிட்டு அந்தக் கேரக்டருக்கு வந்து வடிவேலு சார் பண்ணினா எப்படி இருக்கும்னு கேட்டாரு. சார் சூப்பரா இருக்கும்னு சொன்னேன்.
அதுக்கு அப்புறம் நானும் மாரி சாரும் முடிவு எடுத்துட்டோம். வடிவேலு சார் இந்தக் கேரக்டரைப் பண்ணலேன்னா படமே வேணாம்.
மாரி சாருக்கு ஆக்சுவலா பெரிய படம் பண்ண வேண்டியதா இருந்துச்சு. விக்ரம் சாரோட படம். சார் எனக்கு கடைசி படம் சார்…னு சொல்லி பண்ண வச்சேன். படம் எல்லாம் சூட் பண்ணி முடிச்சாச்சு. ரொம்ப நல்லா வந்துருக்கு.
கடைசில சொன்னாரு. சார் இன்னும் மூணு நாள் சூட் பண்ணிக்கலாம்னாரு. அதே மாதிரி பண்ணியாச்சு. அப்புறம் ஒரு நாள் வந்து நான் ஒண்ணு கேட்பேன்.
தப்பா நெனைக்கக்கூடாதுன்னு சொல்லி இன்னும் ஒரு நாள் சூட் பண்ணனும்னு சொன்னாரு. ஆடியோ லாஞ்ச் முடியட்டும். அப்புறம் பஞ்சாயத்தை வச்சிக்கலாம்னு சொன்னாரு. அவரோட பரியேறும் பெருமாள் படம் ரொம்ப நல்ல படம். இன்னும் மூணு வருஷம் கழிச்சி படம் பண்ணுனா அவரு கூட தான் சேர்ந்து பண்ணுவேன். ஆனா மூணு வருஷம் கழிச்சி நான் எப்படி இருப்பேன்னு தெரியாது.
படத்துல வடிவேலு சாரோட சீன் ஒரு பத்து நிமிஷம் வரும். அது வேற லெவல். அதுதான் இந்தப் படத்தோட உயிர்நாடி. அவரைப் பார்த்துட்டு என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரில. அப்படியே கட்டிப்புடிச்சிட்டேன். என்னண்ணே…ன்.. இப்படி பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அப்போ தான் அவரு சொன்னாரு. இதுதான் இந்தப் படத்தோட உயிர்னாரு.