ஏற்கனவே டாடா, மாருதி உள்பட பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகின்றன என்பதும் அவை நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் விரைவில் டாட்டா மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனங்களும் புதிய மாடல் எலக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
டாட்டா நிறுவனம் டாட்டா அல்ட்ரா இவி என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் மாருதி சுசுகி நிறுவனம் இவிஎக்ஸ் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்தியர்கள் மத்தியில் இந்த இரண்டு மாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ராஸ் இவி காரை பொறுத்தவரை இந்தியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் ஏற்கனவே டாடாவின் மற்ற எலக்ட்ரிக் கார் மாடல்களை விட இது நவீனமானது மற்றும் ஆடம்பரமானது என்றும் கூறப்படுகிறது. விரைவில் இந்த எலக்ட்ரிக் காரை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் இந்த மாடலில் ஐசிஇ வெர்ஷன் இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் சேர்த்து விரைவில் வெளியிட டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்த கார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்றும் அதே நேரத்தில் இந்த கார் விலையும் மற்ற நிறுவனங்களின் காரை விட குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கார் பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடல் டாடா அல்ட்ரா இவி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மாருதி நிறுவனத்தின் இவிஎக்ஸ் என்ற மேலும் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் மற்ற எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. டாடாவின் அல்ட்ரா ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் மாருதி நிறுவனத்தின் இவிஎக்ஸ் 550 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு கார்களின் மாடல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு இந்த மாடல் கார்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் கார்களின் டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் இந்த கார் வெளியாகும் போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.