ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய VR ஹெட்செட்.. விலை எவ்வளவு தெரியுமா?

By Bala Siva

Published:

VR என்று கூறப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் தற்போது பிரபலமாகி வருகிறது என்பதும் ஜியோ முதல் ஆப்பிள் நிறுவனங்கள் வரை VR ஹெட்செட் சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பேஸ்புக் நிறுவனத்தின் மெட்டா அறிமுகம் செய்திருக்கும் VR ஹெட்செட் குறித்த தகவல் பயனர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க்கு ஜூக்கர்பெர்க், மெட்டா குவெஸ்ட் 3 என்ற புதிய VR ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளார். இதன் விலை 500 டாலர் என்றும் விலை குறைய இன்னும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. உயர் தெளிவு திறன் கொண்ட ரியாலிட்டி கலரை கொண்ட இந்த ஹெட்செட் பயனர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்செட் குறித்த முழு விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

Quest 3 என்பது ஒரு முழுமையான VR ஹெட்செட் ஆகும். அதாவது இது வேலை செய்ய PC அல்லது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இது புதிய Qualcomm Snapdragon XR2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 1920 x 1920 பிக்சல்கள் ரெசலூசன் கொண்டது.

Quest 2 ஐ விட வேகமான மற்றும் அதிக ஸ்டோரெஜை கொண்டுள்ளது.

Quest 3 ஹெட்செட்டில் விலை 128GB மாடலுக்கு $399 மற்றும் 256GB மாடலுக்கு $499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும்.