உடற்பயிற்சி செஞ்சா முடி வளரும்! இது தெரியாம போச்சே!

அழகான ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்பதை அனைவரது விருப்பம். ஆனால் அவ்வாறு சிலருக்கு இயற்கையாக அமைந்தாலும் தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்தினால் தான் நிறைவான பலன்களை பெற முடியும்.

முடி நீளமாக மற்றும் உறுதியாக வளர உடற்பயிற்சி சிறந்த தீர்வு என்றால் நம்ப முடிகிறதா? பொதுவாக இதற்கு எண்ணெய், ஷாம்பு போன்றவையே பெரும்பாலானோர் நாடும் நிலையில், உடற்பயிற்சி எவ்வாறு முடி வளர்ச்சிக்கு உதவும் என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

உடற்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் சீராக்குவதால் முடி நன்கு வளரும், இளநரை மற்றும் முடி கொட்டுவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது மன அழுத்தம் வெகுவாக குறைவுதான் முடி கொட்டுவது குறைந்து முடி நன்றாக வளரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

உடற்பயிற்சி செய்யும் போது சுரக்கும் சிரட்டோனின் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சியான உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் முடி நன்றாக வளர்வதை உறுதி செய்கின்றது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது தலையில் இருந்து வெளியாகும் இயற்கையான எண்ணெய் தலை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.

பசிக்காத குழந்தையும் ஆசையா சாப்பிடும் மாங்காய் சாதம்! எப்படி செய்யணும் தெரியுமா? இதோ ரெசிபி!

சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை உள்வாங்கவும், நல்ல தூக்கம் வரவும், உடற்பயிற்சி உதவி தலைமுடி வளர சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றது . கார்டியோ, கழுத்து உடற்பயிற்சி, ஜாகிங் மற்றும் மூச்சு பயிற்சி தொடர்ச்சியாக செய்து வந்தால் பொதுவான உடல் ஆரோக்கியத்துடன் தலைமுடி சார்ந்த சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும் என மருத்துவர்கள் கருது தெரிவிக்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews