ஹோட்டல் முதல் ஏரோஸ்பேஸ் வரை.. எம்.எஸ்.தோனி செய்த முதலீடுகள்..!

By Bala Siva

Published:

எம்எஸ் தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த கேப்டன் என்று தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மையாகவும்.

கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் என்பதும் அதிலிருந்து அனேகமாக விரைவில் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எம்.எஸ். தோனி பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் முதல் விண்வெளி துறை வரை பல திட்டங்களில் தனது பணத்தை அவர் முதலீடு செய்து உள்ளார். இந்தியாவின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவரான தோனி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து மட்டுமின்றி விளம்பர நிறுவனங்களிடம் இருந்தும் மிகப்பெரிய தொகை வருமானம் வருகிறது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் அணிகளில் ஒன்றான சிஎஸ்கேவில் 12 கோடி அவர் சம்பளம் தருவதாக கூறப்படுகிறது. எனவே அவர் தனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். ரித்தி ஸ்டோர்ஸ் என்ற விளையாட்டு நிறுவனத்தில் தோனிக்கு பங்கு உள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் கிளைகளை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆடை மற்றும் காலணி பிராண்டான செவன் என்ற நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார். காலணி மட்டுமின்றி உணவு மற்றும் பானங்கள் நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். மேலும் தோனி ஒரு உடல் தகுதிமிக்க நபர் என்பதால் உடல் தகுதியை மேம்படுத்தும் ஒரு நிறுவனத்திலும் நகர் முதலீடு செய்துள்ளார். டோனி ஸ்போர்ட்ஸ் பிட் என்ற பெயரிட்ட இந்த நிறுவனம் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியன் சூப்பர் லீக் இன் சென்னையின் எப்சி கால்பந்து அணியின் உரிமையாளராகவும் தோனி இருக்கிறார் என்பதும் அது மட்டும் இன்றி ராஞ்சி ரேஸ் ஹாக்கி அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் பெங்களூரில் ஒரு பள்ளியை தொடங்கி உள்ளார் என்பதும் தோனி குளோபல் ஸ்கூல் ஆங்கில மீடியம் என்ற இந்த பள்ளியும் மிகப்பெரிய லாபத்துடன் இயங்கி வருகிறது என்றும் சமீபத்தில் இந்த பள்ளி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தற்போது அவர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார் என்பதும் அவர் தயாரிக்கும் முதல் படமே ஒரு தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பத் துறைகளும் தோனி பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். குறிப்பாக கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தோனி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள புகழ் பெற்ற ஹோட்டல் ஒன்றும் தோனிக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.