தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள பாலத்தளி எனும் கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த சிறப்புமிகு துர்க்கை அம்மன் திருக்கோவில் உள்ளது.
இங்கு அம்பாள் சக்தி பீடமாய் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணு துர்க்கையாய் மேற்கு முகம் நோக்கி வீற்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தை , ஆடி மாதங்களில் மாதம் முழுவதும் குறிப்பாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிவதை நாம் பார்க்கலாம்.
இந்த புகழ்பெற்ற திருக்கோவிலில் வைகாசி விசாக வசந்த திருவிழா கடந்த மே மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. அம்மன் இந்த திருவிழா நாட்களில் காலையும் இரவும் வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி தருவார் . நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேர் ஊர்வலம், பால்குடம் ஆகியன நடைபெற்றன. இன்று திருவிழாவின் நிறைவு நாளாக மஞ்சள் தண்ணீர் நீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று கூடி விழாவை சிறப்பித்து அம்மனின் அருள் பெற்றனர்.