இன்றைய இளம் தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் எல்லா பொருட்களுமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களையும் மீறி குழந்தைகளுக்கு ஒரு சில காரணிகளால் சரும பிரச்சனைகள் உண்டாகிறது. அதிலும் முக்கியமான ஒரு சரும பிரச்சனை டயப்பர் ராஷ்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை உறங்கும் போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் அதிக அளவு டயப்பர்களையே பயன்படுத்துகிறார்கள். பிறந்த குழந்தையிலிருந்து இரண்டு வயது குழந்தை வரை இதில் அடக்கம். இதனால் அந்த குழந்தைகளுக்கு டயப்பர் ராஷ் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
டயப்பர் ராஷ் என்றால் என்ன?
குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் பகுதி தடித்து, சிவந்து காணப்படும். இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அசௌகரியத்தை உண்டாக்கும். தொற்று ஏற்பட்டு குழந்தைகளுக்கு அரிப்பு, எரிச்சல் அதிக அளவில் உண்டாாக்கும்.
டயப்பர் ராஷ் எதனால் ஏற்படுகிறது?
நீண்ட நேரம் ஒரே டயப்பரை அணிவித்தல்.
டயப்பரை குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி மாற்றாமல் இருப்பது டயப்பர் ராஷ்க்கு முக்கியமான ஒரு காரணியாகும். இது சிறுநீர் மற்றும் மலத்தில் உள்ள தொற்றுகள் சருமத்தில் படிந்து அலர்ஜியை ஏற்படுத்தும்.
இறுக்கமான டயப்பர்களை அணிவித்தல்.
டயப்பர் மிகவும் இறுக்கமாக இருந்து சரியான காற்றோட்டம் இல்லாமல் இருந்தாலும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
அதிக உணர் திறன் கொண்ட தோல்
சில குழந்தைகளுக்கு தோல் அதிக உணர் திறன் கொண்டதாக இருக்கலாம். இதனாலும் டயப்பர் ராஷ் ஏற்படலாம்.
டயப்பர் ராஷினை தடுப்பது எப்படி?
- சரியான இடைவழியில் டயப்பரை மாற்றுதல்.
- நல்ல காற்றோட்டமான டயப்பரை பயன்படுத்துதல்.
- ஒவ்வொரு முறை டையப்பர் மாற்றும்போதும் குழந்தையின் டயப்பர் பகுதியை நன்கு சுத்தப்படுத்தி உலர்வான பின்பு மாற்றுதல்.
- குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் இடைவெளியில் சிறிது நேரம் டயப்பர் ஏதும் அணிவிக்காமல் காற்றோட்டத்துடன் இருக்க செய்தல்.
- அதிக அளவு வாசனை நிறைந்த டயப்பர்களை பயன்படுத்துவதை தவிர்த்தல்.
- டயப்பர் மாற்றும்போது பெற்றோர்கள் தங்கள் கைகளையும் சுத்தமாக வைத்திருத்தல் நல்லது.
- கூடுமானவரை வீட்டில் இருக்கும் பொழுது டயப்பர்களுக்கு பதிலாக பருத்தித் துணிகளை படுத்தலாம்.
குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது அதை கவனமாய் பாதுகாத்தல் அவசியம். இதற்கு துணி டயப்பர் தான் முழுமையான தீர்வு என்று சொல்லிவிட முடியாது காரணம் எந்த டயப்பராக இருந்தாலும் நீண்ட நேரம் குழந்தையின் சருமத்துடன் சிறுநீர் தொடர்பில் இருக்கும் பொழுது இது போன்ற தொற்றினை உண்டாக்கி அவர்களுக்கு ராஷஸை ஏற்படுத்தும். இது மிகப்பெரிய நோய் அல்ல ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்திட்டால் குழந்தைகளை அசவுகரியத்தில் இருந்து நாம் காக்கலாம்.