பள்ளிகளுக்கான கோடைகால விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்நேரத்தில் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் நம் பிள்ளையை எந்தப் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்? எது சிறந்தது ? சிபிஎஸ்இ க்கும் மெட்ரிகுலேஷனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஐபிஎஸ்இ என்றால் என்ன? மெட்ரிகுலேஷன் மற்றும் சமச்சீர் கல்வியும் ஒன்றா? இப்படி பல்வேறு குழப்பங்கள் பெற்றோர்களுக்கு ஏற்படலாம்.
தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் பெரும்பாலான பெற்றோர்களின் தேர்வு என்னவோ தனியார் பள்ளியாக தான் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் மெட்ரிக், சிபிஎஸ்இ என பல்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் பல மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளாக மாற்றம் பெற்று வருகிறது இந்த பாடத்திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன என்பதை நாம் காணலாம்.
மெட்ரிகுலேஷன்
மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் 14 பாடங்கள் வரை இருந்தது. மெட்ரிகுலேஷனில் பயிற்று மொழி ஆங்கிலம். தற்போது தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் இல்லை 2010ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டம் கொண்டு வந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியது பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும் அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும் உள்ளது. மாநிலக் கல்வி பெரும்பாலும் அந்தந்த மாநிலங்களில் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு.
CBSE
தேசிய அளவிலான கல்வி வாரியம் 1962 ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர்கள் அடிக்கடி பணிமாற்றம் செய்யப்படுவதால் அவர்களின் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் ஒரே கல்வி கிடைக்க உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் சிபிஎஸ்இ. ஆரம்பத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே இருந்த இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை இப்பொழுது பல தனியார் பள்ளிகள் பின்பற்றி வருகிறார்கள். ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய. JEE, NEET போன்ற நுழைவுத் தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் எளிதில் கையாளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ICSE
ICSE பாடத்திட்டமானது மற்ற பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு விரிவான மற்றும் முழுமையான பாடத்திட்டத்தைத் தொடர்ந்து ஐ.சி.எஸ்.இ வாரியம் அனைத்து பாடங்களையும் சம முக்கியத்துவத்துடன் உள்ளடக்கியது. இயற்பியல், ஆங்கிலம், வேதியியல், வணிகவியல், பொறியியல், குடிமையியல் போன்ற பாடங்களை கொண்டது.
இந்த பாடத்திட்டங்கள் அனைத்தும் அதன் அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிப்படுவதோடு அதில் தேவையான மாற்றங்கள் அவ்வபோது செய்து வரப்படுகிறது.