பிளே ஆப் சுற்றுக்கு தகுதி.. ஐபிஎல் கோப்பையை நெருங்கிவிட்டது சிஎஸ்கே..!

By Bala Siva

Published:

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்னும் இரண்டே போட்டிகளில் வெற்றி பெற்று விட்டால் இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பை சென்னை அணியின் வசமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றதை அடுத்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் மற்றும் கான்வே அபாரமாக விளையாடினர் என்பதும் இருவரும் தலா 79 மற்றும் 87 ரன்கள் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வந்த சிவம் துபே மூன்று சிக்ஸர்கள் அடித்து 22 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் என்ற இமாலய எண்ணிக்கையை தொட்டது.

csk pathiranaஇதனை அடுத்து 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடிய நிலையில் அந்த அணியின் விக்கெட் சீராக விழுந்தது. கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் தனி ஆளாக போராடி 86 ரன்கள் அடித்தபோதிலும் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து 17 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே லக்னோ அணியும் மிக அபாரமான ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே மூன்றாவது இடத்திற்கு செல்ல முடியும் இல்லையென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிளே ஆப் தகுதி பெற்றுவிட்ட சென்னை அணி அடுத்ததாக கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..