இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என்றும் கூகுளின் ஜிமெயில், டாக்குமெண்ட், டிரைவ் உள்பட பல அம்சங்களில் இரண்டு ஆண்டுகளாக லாகின் செய்யவில்லை என்றால் அந்த அக்கௌன்ட் முடக்கப்படும் என்றும் கூகுள் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் கூகுள் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக கூகுள் ஜிமெயில் மூலம் கணக்கு தொடங்கி அதிலிருந்து youtube சேனல் ஆரம்பித்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். youtube சேனல் ஆரம்பித்த பலர் இரண்டு ஆண்டுகள் லாகின் செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் தங்களுடைய youtube சேனல் நீக்கப்படும் என்ற அச்சம் இருந்தது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது youtube சேனலுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறைந்தது இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அல்லது லாகின் செய்யாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் நீக்குவதாக இருந்தாலும் youtube வீடியோக்களை கொண்ட கணக்குகளை மட்டும் நீக்க மாட்டோம் என விதிவிலக்கு அளித்து கூகுள் தெரிவித்துள்ளது. தற்போது youtube வீடியோக்களுடன் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து youtube பயனாளர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகளாக கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் அல்லது லாகின் செய்யாமல் இருந்தால் அந்த கணக்கை நீக்கும் திட்டத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், கூகுள் டாக்குமெண்ட்ஸ், கூகுள் காலண்டர் கூகுள் மெயில், கூகுள் புகைப்படங்கள் உள்ளிட்டவைகள் இரண்டு ஆண்டுகளாக லாகின் செய்யவில்லை என்றால் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது செயலில் உள்ள கணக்குகளை விட 10 மடங்கு செயலில் இல்லாத கணக்குகள் இருப்பதாகவும் இதனை அடுத்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் கூகுள் இருப்பதாகவும் கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட கூகுள் கணக்குகள் மட்டுமே நீக்கப்படும் என்றும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், கல்லூரிகள் போன்ற நிறுவனங்களின் கணக்குகள் பல வருடங்களாக லாகின் செய்யப்படாமல் இருந்தாலும் நீக்க மாட்டோம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2003 முதல் செயல்படாத கூகுள் கணக்குகளை நீக்க தொடங்குவோம் என்றும் கூகுள் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் அதனை பராமரித்துக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.