ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல.. கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு..!

By Bala Siva

Published:

ஆன்லைன் ரம்மி விளையாடியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து அதனால் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் இது குறித்த வழக்கு நடந்த நிலையில் ஆன்லைன் ரம்மி ஒரு திறன் அடிப்படையிலான விளையாட்டு என்றும் அது ஒரு சூதாட்டம் அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி எதிர்முனையில் விளையாடினாலும், மற்றொரு நபருடன் விளையாடினாலும் அல்லது கணினியுடன் விளையாடினாலும் அது சூதாட்டம் அல்ல என்றும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் நேரில் விளையாடுவதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்றும் இது முற்றிலும் திறன் அடிப்படையான விளையாட்டு தான் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கில் மேலும் இந்த விளையாட்டு குறித்து கூறியபோது, ‘* ரம்மிக்கு வீரர்கள் திறமை மற்றும் உத்தியின் கலவையை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும், விளையாட்டின் முடிவு தற்செயலாக மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும்,  விளையாட்டைப் பயிற்சி மற்றும் கற்றுக்கொள்வதன் மூலம் வீரர்கள் தங்கள் வெற்றிக்கான வாய்ப்பை மேம்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இது ஆன்லைன் ரம்மி தளங்களை சட்டப்பூர்வமாகவும், வழக்குக்கு பயப்படாமலும் செயல்பட அனுமதிக்கும். ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்கான கூடுதல் விருப்பங்கள் இருக்கும் வீரர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய தீர்ப்பு என கூறப்படுகிறது.