இதுவரை இல்லாத சாதனை.. இந்திய பெருங்கடலில் ரூ.12000 கோடி போதை மருந்து பறிமுதல்..!

இந்தியாவில் இதுவரை இல்லாத சாதனையாக ரூ.12000 கோடி மதிப்புள்ள 2500 கிலோ போதை மருந்து இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய போதை…

இந்தியாவில் இதுவரை இல்லாத சாதனையாக ரூ.12000 கோடி மதிப்புள்ள 2500 கிலோ போதை மருந்து இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகம் வெள்ளிக்கிழமை அன்று இந்திய பெருங்கடலில் போதைப் பொருள்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த கப்பலை இடைமறித்து சோதனை செய்தது. அப்போது அதில் 12000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 2500 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவில் போதை மருந்து பறிமுதல் இதுதான் என்று கூறப்படுகிறது. அதிக அளவு போதை கடத்தல் பொருள்கள் இந்திய பெருங்கடல் வழியாக கடத்தப்படுவதாக சர்வதேச போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து மதர்ஷிப் என்ற கப்பலை விடைமறித்து சோதனை செய்தனை செய்யப்பட்டது

23 மணி நேரம் இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அனைத்தும் உயர் ரகம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. போதை பொருள் கொண்டு வந்த கப்பல் ஓமன் அருகே இந்திய பெருங்கடலில் நிறுத்தப்பட்டதாகவும் அந்த கப்பலில் இருந்து கடத்தப்பட்ட பொருள்கள் இலங்கை மற்றும் இந்தியா மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆபரேஷன் சந்திரகுப்தா என்ற இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும் இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு வந்ததாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய கடற்பகுதியில் 529 கிலோ போதைப் பொருள் கடத்தப்பட்டதை பறிமுதல் செய்ததே இதுவரை அதிகபட்ச பறிமுதலாக இருந்த நிலையில் தற்போது 2500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது