ட்விட்டரில் இருந்து திடீரென விலகும் எலான் மஸ்க்.. என்ன காரணம்?

By Bala Siva

Published:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்  திடீரென ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் குறிப்பாக சிஇஓ பதவியில் இருந்தவரை வேலையில் இருந்து நீக்கினார் என்பது தெரிந்ததே. அதன் பிறகு சிஇஓ பதவியை தானே வைத்துக் கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்தார் என்பதும் ப்ளூடிக் உள்பட ஒரு வசதிகளை அவர் அறிமுகப்படுத்தி அதற்காக பணம் செலுத்த வேண்டும் என்று விதியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகம் முழுவதும் ப்ளூடிக் ட்விட்டர் பயனாளிகள் கட்டணம் செலுத்தி தான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி ட்விட்டரில் வேறு சில மாற்றங்களையும் அவர் செய்துள்ளார். 140  கேரக்டர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று இருந்ததை மாற்றி ப்ளூடிக் பயனாளர்கள் எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் ட்விட்டர் தற்போது பேஸ்புக் போல நீண்ட கதை எழுதும் ஒரு சமூக வலைதளம் மாறிவிட்டது.

அதுமட்டும் இன்றி விரைவில் ட்விட்டரில் இருந்து ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியும் ஏற்படுத்தி தர இருப்பதாகவும் ஈரான் மஸ்க்  தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் பயனாளர்கள் எதிர்பார்க்காத பல்வேறு சிறப்பு அம்சங்கள் ட்விட்டரில் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் திடீரென ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.

புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் இன்னும் ஆறு மாதங்களில் பதவி ஏற்பார் என்றும் எலான் மஸ்க்  தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக அவரெ தொடர்வார் என்றும் தொழில்நுட்ப அதிகாரியாகவும் அவர் தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக அவர் யாரை நியமனம் செய்து இருக்கிறார்? அவரது அவர் எந்த நாட்டினர்? என்பது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் எலான் மஸ்க் இடம் வேலை செய்யும் திறமையுள்ள அந்த நபர் யார் என்பதையும் அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.