12ம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு; அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த ஆண்டு அவர்கள் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என்றும்…

public exam 1 16460993033x2 1

நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த ஆண்டு அவர்கள் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் பிளஸ் டூ பொது தேர்வில் 47,934 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் துணை தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என்றும் துணை தேர்வு குறித்த விபரங்கள் பள்ளி கல்வித்துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் இந்த துணைத் தேர்வு ஜூலை மாதம் 5ஆம் தேதி முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி மொழி தேர்வும், 20ஆம் தேதி ஆங்கில தேர்வு, 23ஆம் தேதி கணிதம் உயிரியல் தேர்வு, 24ஆம் தேதி பயாலஜி தேர்வு, 26 ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் குறித்த முழு அட்டவணை இதோ:

time table