கடைசி ஓவரில் 21 ரன்கள்.. கொல்கத்தாவுக்கு பஞ்சாப் கொடுத்த இலக்கு..!

By Bala Siva

Published:

ஐபிஎல் தொடரின் 53வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து கொல்கத்தா அணி 180 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் விளையாட உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

pbks vs kkr

இதனை அடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 57 ரன்கள் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் ஷாருக்கான் அதிரடியாக எட்டு பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியை பொறுத்தவரை ராணா 2 விக்கட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஸல், சுயேஷ் சர்மா, சுனில் நரேன் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் 180 என்ற இலக்கை மிக எளிதில் எட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.