தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெட் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஜோசப் அமல்ராஜ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற போது மனுதாரர் தனது தரப்பிலிருந்து வாதம் செய்தார்.
ஆசிரியராக பணியாற்றும் நான் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி பணியிடத்திற்கு எனக்கு முழு தகுதி உள்ளது. ஆனால் டெட் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கு பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனால் என்னை போல் டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் வாய்ப்புகள் பறிபோகிறது. இது சட்டவிரோதமாக கருதப்படும்.
எனவே எனக்கு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார் . இந்த மனுவை விசாரித்த நீதிபதி தகுதியானவர்களை கொண்டு பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் டெட் தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வை பங்கேற்கும் கொள்கை முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
மேலும் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி இது குறித்து இரண்டு வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதுவரை தலைமை ஆசிரியர் பதவிக்கான கலந்தாய்வு நடத்தக்கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.