வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ.1.6 லட்சம் நஷ்டம்.. என்ன நடந்தது?

By Bala Siva

Published:

பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் இன்ஜினியர் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 1.6 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் வேலை கிடைப்பது கூட எளிதாக இருக்கும், ஆனால் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பெங்களூரில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த முடிவு செய்தார்.

அவர் ஆன்லைனில் உள்ள முன்னணி இணையதளம் மூலம் வீட்டை தேடிய போது அவருடைய அலுவலகம் பக்கத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகைக்கு விடப்பட இருப்பதை பார்த்தார். இதனை அடுத்து அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணை அவர் தொடர்பு கொண்ட போது வீட்டின் உரிமையாளர் ராணுவ அதிகாரி என்றும் அவர் வட இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

online fraud

இரண்டு மாத வாடகை அட்வான்ஸ் ஆக கொடுக்க வேண்டும் என்றும் மாத வாடகை ரூ.25000 என்று பேசி முடிக்கப்பட்டது. மேலும் பெங்களூரில் உள்ள தனது உறவினர் என்று அந்த ராணுவ வீரர் ஒருவருடைய மொபைல் எண்ணை கொடுத்தார். அவருடன் சாப்ட்வேர் இன்ஜினியர் தொடர்பு கொண்ட போது வாடகை ஒப்பந்த பத்திரம் செலவுக்காக நான்காயிரம் ரூபாய் ஜிபே மூலம் அனுப்ப வேண்டும் என்றும் வாடகை ஒப்பந்த பத்திரம் முடிந்தவுடன் அந்த பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதனை நம்பி சாப்ட்வேர் இன்ஜினியர் அந்த நபருக்கு ரூபாய் 4000 ஜிபே மூலம் அனுப்பிய நிலையில் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து எட்டு முறை பணம் எடுக்கப்பட்டது. இதனை மொத்தம் ரூ.1.6 லட்சம் அவருடைய வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து வங்கி மற்றும் காவல் துறையில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் சம்பந்தப்பட்ட இணையதளம் அந்த விளம்பரத்தை திடீரென அகற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே பெங்களூரு மட்டுமின்றி எந்த ஊரில் வீடு வாடகைக்கு தேட வேண்டாம் என்றால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.