கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் வரும் பத்தாம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இது குறித்த தகவலை கூகுள் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த போன் குறித்த டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அவ்வப்போது வெளியாகி பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததை. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டபிள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் செகண்ட்ரி டிஸ்ப்ளே 5.80 இன்ச் திரை அளவை கொண்டது. பிரதான திரையின் அளவு 7.60 இன்ச். இந்த போன் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. ப்ரீமியம் ரக போனாக வெளிவரும் இந்த போனின் விலை சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா போனுக்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சுமார் ரூ.1.38 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
வரும் மே 11-ம் தேதி கூகுள் நிறுவனம் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
✨May The Fold Be With You✨https://t.co/g6NUd1DcOJ#GoogleIO #PixelFold
May 10 pic.twitter.com/K8Gk21nmo8— Made by Google (@madebygoogle) May 4, 2023