தனது முழு நிதி பொறுப்பையும் AI டெக்னாலஜியிடம் ஒப்படைத்த தொழிலதிபர்.. ஏகப்பட்ட பணம் மிச்சம்..!

By Bala Siva

Published:

AI தொழில்நுட்பம் என்று கூறப்படும் நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மிக துல்லியமாக நம்முடைய தேவைகளை அறிந்து இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்கிறது என்று பலர் தங்களது சமூக வலைதளங்களில் அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது நிதி மேலாண்மை பணிகளை முழுவதுமாக AI தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் இதன் காரணமாக தனக்கு ஏகப்பட்ட பணம் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் AI தொழில்நுட்பத்திடம் தனது முழு நிதி மேலாண்மை பணிகளை ஒப்படைத்தார். அவருடைய வங்கி கணக்கு, நிதிநிலை அறிக்கைகள், கடன் அறிக்கைகள் மற்றும் மின்னஞ்சல் ஆட்டோ பதில் அனுப்புவது உள்பட அனைத்து பொறுப்பையும் AI தொழில்நுட்பத்திற்கு தந்தார். மேலும் தனது ஒவ்வொரு வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டிலும் செலவு செய்யவும் அந்த தொழில்நுட்பத்திற்கு அவர் அனுமதி அளித்தார். மேலும் தான் செய்யும் செலவுகளை பகுப்பாய்வு செய்து ஒவ்வொரு மாதமும் தேவையற்ற செலவுகள் இருந்தால் அதை நிறுத்தவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் 80 டாலர் அவரது கணக்கிலிருந்து தேவையில்லாமல் கழிக்கப்படுவதை தொழில்நுட்பம் கண்டுபிடித்து அவற்றை ரத்து செய்தது. அதுமட்டும் என்று எந்த ஒரு பேமென்ட் ஆக இருந்தாலும் அந்த பேமெண்ட்டை ஆய்வு செய்து ஒரு சில பேமென்ட் தவறானது, சில பேமெண்ட் மோசடியானது என சுட்டிக்காட்டி உள்ளது. அதனை அடுத்து அந்த பேமென்ட் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தனது மேலா நிதி மேலாண்மைகளையும் AI தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்ததால் தனக்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் டாலர்கள் மிச்சப்படுவதாக அந்த தொழில் அதிபர் தெரிவித்துள்ளார். ஒரு மிகச் சிறந்த ஆடிட்டரை வைத்து கணக்கு செய்தால் கூட இவ்வளவு நுட்பமாக சில தவறுகளை கண்டுபிடிக்க முடியாது என்றும் ஆனால் AI தொழில்நுட்பம் மிகவும் நுட்பமாக தான் செய்யும் நிதி தவறுகளை கண்டுபிடித்து தனக்கு மிகப்பெரிய லாபத்தை தந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.