காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷிகர் தவான்.. புத்துணர்ச்சியுடன் டாஸ் வென்ற பஞ்சாப்..!

By Bala Siva

Published:

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கடந்த சில போட்டிகளாக காயம் காரணமாக விளையாடவில்லை என்பதும் அதனால் சாம் கர்ரன் கேப்டன் ஆக பொறுப்பேற்றார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் காயம் குணமாகியதை அடுத்து பஞ்சாப் அணிக்கு மீண்டும் ஷிகர் தவான் திரும்பியுள்ள நிலையில் அந்த அணி வலுவானதாக கருதப்படுகிறது.

மேலும் இன்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து லக்னோ அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரின் 38 வது போட்டி இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்டுள்ள நிலையில் ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் மீண்டும் திரும்பி உள்ளதை அடுத்து ஓபனிங் பேட்டிங் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

shikar dawan

பஞ்சாப் அணி ஏற்கனவே 7 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் அந்த அணி வென்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள நிலையில் அந்த அணி வெற்றி பெற்றால் இரண்டு அல்லது மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் வலுவாக இருப்பதால் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இன்றைய போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்த தகவல்கள் இதோ:

லக்னோ: கே.எல்.ராகுல், கிளே மேயர்ஸ், க்ருணால் பாண்ட்யா, ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், யாஷ் தாக்கூர்

பஞ்சாப்: ஷிகர் தவான், அதர்வா டைடே, சிக்கந்தர் ரைசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ரபடா, ராகுல் சஹார், குர்னூர் பிரார், அர்ஷ்திப் சிங்,