அதிவேக 7000 ரன்கள் அடித்த கே.எல்.ராகுல்.. இதற்கு முன் 7000 ரன்கள் அடித்தவர்கள் யார் யார்?

By Bala Siva

Published:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணியின் கேஎல் ராகுல் 7000 ரன்கள் என்ற புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளதை எடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்று நடைபெற்று வரும் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சகா 47 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் அடித்தனர்.

kl rahul 7000 1இந்த நிலையில் 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது லக்னோ அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது என்பது தற்போது களத்தில் கேஎல் ராகுல் மற்றும் க்ருணால் பாண்டியா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியில் கேஎல் ராகுல் 7000 நாட்கள் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேஎல் ராகுல் 197 போட்டிகளில் 7000 ரன்கள் என்ற மைல்களை எட்டி உள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி 212 போட்டிகளில், ஷிகர் தவான் 246 போட்டிகளில், சுரேஷ் ரைனா 251 போட்டிகளில், ரோகித் சர்மா 258 போட்டிகளில் 7000 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் 7000 நாட்கள் எடுத்த கே எல் ராகுலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.