50 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு.. வாங்கியவர் யார் தெரியுமா?

By Bala Siva

Published:

அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே டைனோசர் பூமியில் வாழ்ந்து வந்தன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியில் மோதியதாகவும் இதன் காரணமாகத்தான் டைனோசர் இடம் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக டைனோசர் குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் டைனோசர்களின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆய்வில் கிடைத்த எலும்புக்கூடுகளை கொண்டு டைனோசர்களில் வகைகள் மற்றும் டைனோசர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Dinosaurஇந்த நிலையில் அமெரிக்காவில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த டைனோசர்களின் எலும்புகளை ஒன்று சேர்த்து எலும்பு கூடாக சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 எலும்புகள் கொண்ட இந்த எலும்புக்கூடு சுவிட்சர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட்டது.

டிரனிட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூட்டை வாங்குவதற்கு பலர் போட்டி போட்ட நிலையில் ஐரோப்பாவைச் சேர்ந்த தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் இதனை வாங்கி உள்ளார். 6.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த எலும்பு கூட்டை அவர் வாங்கி உள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 50 கோடி ரூபாய்க்கு டைனோசர் எலும்புகூடு ஏலம் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.