கும்பம் சித்திரை மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை சித்திரை மாதமானது விரயச் சனிக் காலத்தில் நீங்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களுக்கு விடிவு கொடுக்கும் காலமாக  இருக்கும். இனி வரவுள்ள நாட்களில் உங்களுக்கு உற்சாகமான விஷயங்கள் நடைபெறும். ராசிநாதனான சனி…

kumbam

கும்ப ராசியினைப் பொறுத்தவரை சித்திரை மாதமானது விரயச் சனிக் காலத்தில் நீங்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களுக்கு விடிவு கொடுக்கும் காலமாக  இருக்கும்.

இனி வரவுள்ள நாட்களில் உங்களுக்கு உற்சாகமான விஷயங்கள் நடைபெறும். ராசிநாதனான சனி பகவான் ராசியில் இருப்பதால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.

குரு பகவான் உங்களின் குடும்பம் மற்றும் தன ஸ்தானத்தில் வலுப்பெற்றுள்ளார். உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.ராகுவும் – குரு பகவானும் 3 ஆம் வீட்டில் இணையவுள்ளனர், அங்கிருந்து 9 ஆம் வீடான தந்தை ஸ்தானத்தைப் பார்க்கவுள்ளார் குரு பகவான்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை தள்ளிப் போன திருமணங்களும் நடந்தேறும்.திருமணம் தள்ளிப் போனால் திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு-கேது பகவானை வழிபட்டு வரவும்.

தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் உங்கள் முன்னேற்றமானது சிறப்பாக இருக்கும்; லாபங்கள் இரட்டிப்பாகும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களும் வேலைக்குச் செல்லும் முயற்சியில் தீவிரமாகக் களம் இறங்குவார்கள்.

தாயாரின் உடல் நலனில் இருந்த குறைபாடுகள் பெரிதாகும்; மருத்துவச் செலவுகள் விரயச் செலவுகளாக ஏற்படும். வீடு கட்டும் வேலை தற்போது இழுபறியிலேயே இருக்கும். குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு நிலவும்.

வண்டி, வாகனங்கள் ரீதியான செலவுகள் ஏற்படும். புது முதலீடுகள் எதுவும் செய்யாமல் இருத்தல் நல்லது. கடன் வாங்குவதை முடிந்தளவு தவிர்க்கவும். சிவபெருமானை வழிபட்டு வந்தால் உங்கள் தலைக்கு வரும் பிரச்சினைகள் தலைப்பாகையோடு போகும்.